உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் 16

விளைந்த நட்பின் பெருமை எமக்குப் பேரின்பந் தருவதாயிற்று. எங்கள் விழுப்பத்தினை நினைக்குந்தோறும் மக்கள் பேறுகளுள் இதனினுஞ் சிறந்தது பிறிதொன்று உண்டு

உண்டுகொல்! என்று என் நெஞ்சம் உருகா நின்றது.

கால்!

என் நண்பன் விடியற்காலையில் நாலரை அல்லது ஐந்து மணிக்கெல்லாம் விழித்து எழுந்திடுவான்; எனக்கு அவ்வளவு காலையில் எழுந்திருத்தல் இயலாது. நல்ல புலரிக்காலையிலே தான் எனக்கு அயர்ந்த உறக்கம் வருவது வழக்கம். இவ்வழக்கத் தினை நீக்கவேண்டுமெனப் பலகால் முயன்றும், அஃதெனக்குக் கைகூடிற்றில்லை. ஆகவே, ஞாயிறு தோன்றியபின் ஏழு அல்லது ஏழரை மணிக்கு எழுந்தால் மட்டும் என் அறிவு தெளிவாயும் உடம்பு சுறுசுறுப்பாயும் இருக்கும். என் பக்கத்தே படுத்திருந்து விடியற்காலையில் வெள்ளென எழுந்திடும் என் நண்பன் என்னை எழுப்பாமல் நானே எழுந்திடும் வரையில் என் பக்கத்திலிருந்து இனிய இசைகளை மிழற்றிக் கொண்டிருப்பான். அவ்விசையைக் கேட்டதும் எனக்கு உறக்கங் கலைந்துவிடும்.

எவ்வளவுதான் நான் அயர்ந்து உறங்குவேனாயினுஞ்

சிறியதோர் அரவந்தோன்றக் கேட்டால் உடனே உறக்கம் நீங்கி விழிப்பேன். விழித்துக்கொண்டாலும் படுக்கையினின்றும் எழுதற்கு அரை மணி நேரஞ் செல்லும். இங்ஙனமாக நான் விடியற் காலையில் எழுந்து விடுதற்காக என் நண்பன் செய்த சூழ்ச்சி வியக்கற் பாலதா யிருந்தது. இவ்வாறு நாடோறும் என்னை வருத்தாமல் வைகறையிலெழுப்பிக் கொண்டு ஊர்ப்புறத்தே என்னை அழைத்துச் செல்வான்.

சிற்றூர்க்குப் புறம்பேயுள்ள நிலஇயற்கை காண் போருள் ளத்தில் ஒருவகையான மனவெழுச்சியினைத் தோற்று விக்கும் இயல்புடையதாய்த் துலங்குகின்றது. பசுமையான பச்சிலைப் போர்வை மேற்கொண்டு பருத் துயர்ந்தடர்ந்த புளியமரத் தோப்புகள் ஆங்காங்கு இருக்கின்றன. அத் தோப்புகளை அடுத்துச் சிறுசிறு குன்றுகளும் உயர்ந்த மலைகளுந் தோன்று கின்றன. ஓரோவோர் இடங்களில் வாழைத் தோட்டங் களும் வெட்டவெளியான இடங்களும் இருக்கின்றன. அருவியோட் டங்களாயினுங் கான்யாறுகளாயினும் அங்கில்லை. நாற்கோண மாக வெட்டப்பட்டுக் கசங்க ளென்று சொல்லப்படுங் குளங் களும் இறைகேணிகளும் ஆண்டாண்டுக் காணப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/53&oldid=1583479" இலிருந்து மீள்விக்கப்பட்டது