உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு

  • சிந்தனைக் கட்டுரைகள்

29

நிலஞ் சுக்கான் கற்கள் நிறைந்து கரடு முரடாயிருக்கின்றது. வேனிற்காலத்தில் நிலம் மிக வறண்டு புற் பூண்டுகள் கரிந்து போகின்றன. கற்பாறையுள்ள இடங்களில் அகழ்ந்த நீர் நிலைகளில் மட்டுந் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருக்கும். இறைகேணிகள் அகலமாயும் நாற்கோண மாயும் வெட்டப்பட்டு ஆழமாயிருக்கின்றன; அவற்றிற் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டிருத்தலால் நீர் அருந்துவோருந் தலைமுழுகு வோரும் இறங்குவதற்கு அவை எளியவா யிருக்கின்றன; இரும்பினாற் செய்த இறைகூடைகளைப் பூட்டையிற் கட்டி மாடுகள் இழுக்கும் முறையாற் குடியானவர்கள் நாடோறுங் காலையில் வாழைத் தோட்டங்களுக்கு நீர் இறைத்து வருகின்ற மையின் நீர் மிகவுந் தெளிவாயிருக்கின்றது. வள்ளிக்கிழங்கு, கருணைக் கிழங்கு முதலியன பயிரிடப்படுகின்ற கொல்லை களுக்கு இக் கேணி களினின் றிறைக்கப்படும் நீர்தான் பாய்கின்றது.வாழைத் தோட்டங்கள், புளியமரத் தோப்புகள், கிழங்குகள் பயிரிடப் படுங் கொல்லைகள் இருக்குமிடம் ஊர்க்குப் புறம்பேயாதலால், அங்கெல்லாம் மக்கள் பெரும் பாலும் வழங்குவதில்லை. அதனால், அவ்விடங்கள் தனித் திருந்து, தனியே பொழுது போக்காய் வருவார்க்குப் பெரிய தொரு மனமகிழ்ச்சியினை விளைக்கும். அவ்விடங்களின் பக்கத்தே யுள்ள சிறு குன்றுகளும் மலைகளும் ஓசையில்லா விடங்களிற் பெருமையுடன் றோன்று தலால் அவை காண் பார்க்கு ஆழ்ந்து செல்லும் நுட்பவுணர் வினைத் தோற்று விக்கின்றன.

இங்ஙனம்

இளைஞருள்ளத்தே இன்பம் பயக்குந் தன்மையதாயுள்ள சிற்றூர்ப்புறத்தே என் ஆருயிர்த் தோழனான அவ்விளைஞனும் யானும் விடியற்காலையில் உலாவித் திரிதல் வழக்கம். யாருமில்லா அவ்விடங்களில் யாங்கள் உலகவியற் கையினைப் பற்றிப் பேசிக் கொண்டு செல்லுகையில், வானம் பாடிப்புட்கள் புளிய மரக்கிளைகளி லிருந்துகொண்டு இசை பாடும்; நாகணவாய்ப் பறவைகள் கொல்லைகளில் விதை களைப் பொறுக்கித் தின்றுகொண்டு தொகுதி தொகுதி யாயிருக்கும்; மீன்குத்திப் பறவைகள் கசங்களிலுங் கேணி களிலுஞ் சடுதியில் வீழ்ந்து அயிரைமீனைக் கௌவிக் கொண்டு செல்லும். இவற்றைப் பார்த்து மகிழ்ந்துகொண்டே யாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/54&oldid=1583480" இலிருந்து மீள்விக்கப்பட்டது