உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் 16

ஒருநாள் ஒரு சிறு குன்றின் மேல் ஏறியிருந்து நாயுருவி வேராற் பற்றுலக்கிக் கொண்டிருக்கும் போது, எமக்கு எதிரே கிழக்கில் ஞாயிறு நெருப்புத்திரளைப்போல் தக தக வென்று கிளம்பிற்று.இறைவனாற் படைக்கப்பட்ட உலக வியற்கையின் நலங்களைத் தெரிந்துகொள்ள மாட்டாதவர்க்கு, அவற்றைப் பொதிந்து சுருங்கக் காட்டி அறிவுறுத்தற்கு இறைவன் மேலே தூக்கிய பொற்குடம் போல்வதென்றே ஞாயிற்றினைக் குறித்துப் பேசினேன். அதனைக் கேட்ட என் நண்பன் அது பொருத்த மேயாம்; ஏனெனில், ஞாயிறு விளங்காத இராக் காலத்தே இருள் கவிந்து கண்ணறிவை மழுக்கி மக்கள் மனவறி வையுங் குறுக்கிவிடுகின்றது. விரிந்த மன இருளை நீக்குவது சுருங்கிய அறிவொளியேயாம் என்பதை இனிது விளக்குதற் கன்றே, எல்லாம்வல்ல இறைவன் ஞாயிறு என்று சொல்லப் படும் ஒரு சிறு பொற்குடத்தே ஒளியாகிய அமிழ்தத்தை நிரப்பி அதனை வான்மேற்றூக்க, அதனுட் பொதிந்த அவ் வமிழ்தக் கதிர்கள் விரிந்த இருண்மேற் பல்லாயிரங் கண்கள்போற் பாய்ந்து அவற்றைச் சின்னபின்னமா யழித்து நமக்குக் கட்புலனை விளக்கி மனவறிவையும் ஓங்கச் செய்கின்றது. கட்புலனுக்குக் குறுகித் தோன்றும் ஞாயிறு ஒன்று தானே நமது அறிவைப் பெருகச் செய்ய வல்லதாயின், இறைவன் திருவருள் நம் மனவறிவிற் புகுந்து தோன்றுங்கால் நமதறியாமை முழுதும் மறைந்து போமென்பது சொல்லவும் வேண்டுமோ? கண்ணறிவு இல்லையாயின் இறைவன் அமைத்த படைப்பின் வியத்தகும் அமைப்புகளை நாங் கண்டு களிப்பதெங்ஙனம்? அக்கண்ணறி விருந்தும், அதனை விளக்கும் ஞாயிற்றில்லையாயின் உலக வியற்கையிற் செறிந்த நலங்களை நாங் கண்டறிந்து மகிழ்தல் இயலுமோ? இயலாதன்றே! ஆ! ஞாயிற்றின் மாட்சி அளப்பரிது! என்று விரித்துக் கூறினான்.

6

இவ்வாறு என் இனிய நண்பன் பேசி முடித்த வளவில் என் விழிகள் கிறுகிறென்று சுழலத் தொடங்கின: என்னைச் சூழவிருந்த பொருள்களெல்லாஞ் சடுதியிற் சுற்றுவனவாயின; சூறைக்காற்றின் இடை டைப்பட்ட ப்பட்ட பஞ்சுபோல் ஒரு நிலையின்றி நான் இருந்தபடியே என் உடம்பும் ஆடி நின்றது; உடனே என் அறிவு கலக்கமடைந்து விழித்த கண் விழித்தபடியே நிற்க மரம் போலிருந்தேன். இங்ஙனம் யான் திரிபுற்றிருந்தபோது என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/55&oldid=1583481" இலிருந்து மீள்விக்கப்பட்டது