உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

31

னருகே யிருந்த நண்பனை யான் காணேனாயினேன்; காணே னாக, அவன் நானறியாமல் எங்கே சென்றான் என்றறிய என்னுள்ளம் விழைந்தது; அவனை அழைக்க முயன்றேன், நாவோ எழவில்லை; கையினால் தட்ட முயன்றேன்; கைகள் பொருந்தவில்லை; எழுந்துபோய்த் தேடலாமென்று எழப் புகுந்தேன், கால்கள் அசையவில்லை; இவ்வாறு அசைவற்ற மரம் போல் உடம்பின் இயக்கமின்றி அறிவு கலங்கியிருந்த போது சடுதியில் என் உணர்விலே ஒரு தெளிவுண்டாயிற்று. உடனே, ஒரு நொடிக்குள் மீண்டும் என்னைச் சூழவிருந்த பொருள்கள் சுற்ற, என்னறிவு மீண்டும் கலங்கியது; என் நண்பனைக் காணேன், எழுந்து செல்வதற்குங் கைகொட்டு வதற்கும் என் உறுப்புக்கள் சிறிதும் இசையவில்லை; ஆ! இஃதென்னே மக்கள் வாழ்க்கை எவ்வளவு நிலையில்லா ததா யிருக்கின்றது! அது வான் நிழல் போலவும் உயிர்நிலை கனவு போலவுந் தோன்றுகின்றன! என்று பலவாறு எண்ணினேன்.

66

ங்ஙனம் யான் எண்ணிக்கொண்டிருக்கையில் எனக்கு மிகவுந் தொலைவில் இல்லாத ஒரு மலைக் குவட்டின்மேல் என் பார்வை விழுந்தது; அம் மலை குவட்டின்மேல் ஒருவர் இடையனுக்குரிய ஆடையிட்டுக் கையிற் புல்லாங்குழல் வைத்துக் கொண்டு தோன்றக் கண்டேன். நான் அவரைப் பார்த்தவுடனே அவர் அப் புல்லாங்குழலைத் தம் இதழிற் பொருந்த வைத்து ஊதப் புகுந்தனர். வேனிற்காலத்து நண்பகலில் மணல் வெளியில் நடந்து இளைத்து வந்தான் ஒருவன், ஒர் இளமரக்காவிற் புகுந்து மரநிழலில் உள்ளதொரு நீர் ஊற்றில் தலைமுழுகி மகிழ்ந்தாற்போல, அவ்வேய்ங்குழல் ஓசை என் செவியிற் புகுந்ததும் என் உடம்பெங்கும் ஒரு வகையான சிலிர்சிலிர்ப்பு உண்டாயிற்று: பலவகைப்பட்ட பண்கள் பின்னி இசைக்கப் படும் அவ்வோசையின் சுவை, வற்றக்காய்ச்சிய கன்னற் பாகுபோற் றித்தித்து ஏற ஏற என் நெஞ்சம் நெகிழ்ந்து உருகிற்று: அதுபோல்வது நான் கேட்டதே இல்லை; அதன் இனிமையினை ன உரைக்குந் திறமும் என்னிடத்தில்லை. இம்மைப் பிறவியிற் பல நல்வினைகளைச் சய்து அந்நல்வினை முதிர்ச்சியாற் பேரின்பம் நுகர்தற் பொருட்டுத் துறக்கநாடு செல்வோர், தாம் முன்றுய்த்த துன்பங்கள் மறந்தொழிய, இடையிடையே அரம்பை மாதர் தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/56&oldid=1583482" இலிருந்து மீள்விக்கப்பட்டது