உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் 16

பேரெழில் நலத்திற்குப் பொருந்தப் பல வகைப்பட்ட வியத்தகு இசைக்கருவிகளால் மிழற்றுந் தீவிய ஓசைதானோ இஃதென்று நினைந்தேன். அதனை நினைந்து நினைந்து என் மனங் கரைந்தது.

66

எனக்கு முன்னே தோன்றிய அம்மலையின் மேல் ஒரு முனிவனது ஆவி உண்டென்றும், அஃது அவ் வழியே செல் வார்க்கு இனிய இசை பாடுவதன்றிக் கட்புலனாக நேரே யாருக் குந் தோன்றுவதில்லை யென்றும் பலமுறை பலர் சொல்லி யதைக் கேட்டிருக்கின்றேன். இங்ஙனம் அஃது அவ்வேய்ங் குழலோசையினால் என் அறிவைக் களிப்புறச் செய்து ஊதிக் கொண்டிருக்கையில், அதனோடு உரை யாடினால் எவ்வளவு நன்றாயிருக்குமென்று எண்ணி அதனை வியந்து பார்த்துக் காண்டிருந்தேன்; அப்போது அஃது என்னை நோக்கித் தன் அருகே வருமாறு கைகாட்டி அழைத்தது. பெரியாரைக் கண்டாற் றோன்றும் அடக்க ஒடுக்கத்துடன் நானும் அதன் அருகிற் சென்று, அஃது இசைத்த வேய்ங் குழலிசையினால் என் மனம் உருகுண்டு அதன் அடியில் வீழ்ந்து அழுதேன். அவ்வாவி என்னை இரக்கத்துடன் நோக்கி முறுவலித்து, என்னிடத்துமிக்க பழக்கமுடையது போல் நல்லுரை கூறித்தனதருகிற் சென்ற போது எனக்கிருந்த எல்லா அச்சத்தினையும் உடனே வெருட்டி விட்டது. அது நிலத்தினின்றும் என்னை எடுத்து என் கையைப் பிடித்துக்கொண்டு, முருகவேள், தனித்திருந்து பேசிய காலை யில் நீ சொன்ன வற்றையெல்லாங் கேட்டேன், என்னுடன் வா என்றது.”

அதன்பின், அஃது அம் மலையடுக்கில் மிக உயர்ந்ததொரு முகட்டிற்கு என்னை நடத்திக்கொண்டு சென்று, அம் முகட்டின் உச்சியில் என்னை இருத்திக் கீழ்ப்பால் நோக்கி அங்கு உனக்குத் தோன்றுவதை எனக்குச் சொல் என்றது. அதற்கு, 'அதோ ஒரு பெரும்பள்ளத்தாக்கும் அதிற் பெரியதொரு வெள்ளஞ் சுருண்டு ஒழுகுவதுங் காண்கின்றேன்' என்றேன். 'நீ பார்க்கின்ற அப் பள்ளத் தாக்குத்தான் துன்பவேலி' யென்றும், 'அதிற் சுருண்டு ஓடும் பெருவெள்ளமே காலமென்னும் பெரியதொரு நீர்ப் பெருக்கின் ஒரு பகுதியா' மென்றுங் கூறிற்று. நான் பார்க்கின்ற அவ் வெள்ளப்பெருக்கு ஒரு பக்கத்தே திணிந்த ஓர் இருளினின்றுந் தோன்றி மற்றொரு பக்கத்தில் அவ்வாறே திணிந்ததோர் இருளிற் சென்று மறைந்து போவதற்கு ஏது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/57&oldid=1583483" இலிருந்து மீள்விக்கப்பட்டது