உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

33

என்னை? என்று வினவினேன். 'ஞாயிற்றினால் வரையறுக்கப் படுங் காலத்தின் ஒரு பகுதியே அவ்வெள்ளப் பெருக்கெனவும், உலகத்தின் தொடக்கமே அஃது அவ்விருளினின்றுந் தோன்றுவது. அதன் முடிவே மற்றொரு பக்கத்தில் மறைவ தெனவும் அறிவாயாக' என்றது. மேலும், 'இருபுறத்தும் இருளான் வரம்பறுக்கப்படும் அவ்வெள்ளப்பெருக்கினை நன்றாய் ஆய்ந்து நோக்கி, அதன் கண் உனக்குத் தோன்றுவதை எனக்குச் சொல்' என்று மீண்டும் அது வினவிற்று. 'காலப்பெருக்கின் நடுவிற் கட்டப்பட்டிருக்கும் ஒரு பாலம் எனக்குத் தோன்றுகின்றது' என்றேன். 'நீ காண்கின்ற அப்பாலம் மக்கள் வாணாள் என்றறிவாயாக, 6 அதனை உற்று நோக்கிப்பார்’ என்றது. அவ்வாறே நான் அதனை மிக்க அமைதி யோடு நோக்கிய வளவில் அப்பாலத்திலே எழுபது முழுமை யான கண்களும், உடைந்து நுறுங்கிப்போன சில கண்களு மிருந்தன; அக்கண்கள் எல்லாஞ் சேர்ந்து மொத்தம் நூறு உள்ளன. அக்கண்களை நான் ஒவ்வொன்றாய் எண்ணிக் கொண்டிருக்கும் போது அம் முனிவனது ஆவி, ‘முதன் முதல் அப்பாலத்திற்கு ஆயிரங்கண்கள் இருந்தனவாகப், பெரியதொரு வெள்ளம் பெருகிவந்து அவையிற்றிற் பெரும்பகுதியை அடித்துக்கொண்டு போய் விட்டமையால் இப்போது நீ பார்க்கின்ற நிலைமையில் அப்பாலம் பழுதாக இருக்கின்ற’ தென மொழிந்தது. இன்னும் அதன்மேல் எவ்வெவை பார்க்கின்றாய் எனக்குச் சொல்' எனக் கேட்டது. 'எண்ணிறந்த மக்கள் அதன்மேற் போய்க் கொண்டிருப்பதுங், கரியவானம்

மிக

அதன் இரண்டு முனையிலுந் தொங்கவிட்டாற்போல் தோன்றுவதுங் காண்கின்றேன்' என்றேன். இன்னும் அதனை உற்று நோக்க, அங்ஙனஞ் செல்வாரிற் பலர் அப்பாலத்தின்கீழ் ஓடும் பெரிய வெள்ளத்தில் இடையிடையே விழுந்து அமிழ்தலுங் கண்டேன்; இன்னும் அதனை ஆய்ந்து நோக்கிய அளவில், அப்பாலத்தின் டை யிடையே மறைவாய்ப் பொருத் தப்பட்ட எண்ணிறந்த கள்ளக்கதவு களையுங் கண்டு கொண் டேன்; அக் கள்ளக் கதவுகளின்மேல் அவ் வழிச்செல்வார் மிதித்தவுடனே, அவர் அவற்றின் ஊடே கீழ் விழுந்து காணாமற்போதலும் நன்கு புலனாயிற்று. அப்பாலத்தின் முனையில் தொங்கிய கரிய வானத்தைக் கிழித்துக்கொண்டு மக்கட்டொகுதியினர் அதன்கட்புக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/58&oldid=1583484" இலிருந்து மீள்விக்கப்பட்டது