உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் 16

பொழுது, அவர் தொகை தொகையாய் விழுந்தொழியும்படி நுழைவாயிலிலே அப்படு குழிகள் மிக நெருக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பாலத் தின் நடுவிற் போகப் போக தொகை சுருங்கிவிட்டது; முழுமையாயிருந்த கண்களின் முனையிற் செல்லச் செல்ல அவர்களது தொகை மிகுதிப்பட்டு நெருக்குண்டது.

மக்களின்

பழுதாகாமல்

"பழுதுபட்ட கண்கள் மேல் நொண்டி நொண்டி நடந்தார் ஒரு சிலர் காணப்பட்டாராயினும், அவர்களின் தொகை மிகக் குறைந்த தொன்றாகவே யிருந்தது; இவர் தாமும் நெடுவழி நடந்துவந்தமையால் முற்றுங் களைப்படைந்து ஒருவர்பின் ஒருவராய் விழுந்து விட்டனர்.”

66

.

ங்ஙனம் புதுமையாய்த் தோன்றிய அக்கட்டிடத் தையும், அதிற் காணப்பட்ட பலவேறு பொருள்களையும் பற்றி எழுந்த நினைவில் எனக்குச் சிறிது நேரங் கழிந்தது. கொண்டாட் டமும் மனமகிழ்ச்சியும் உடையராய்ச் செல்கையில் இடையே பலர் சடுதியில் வீழ்ந்தொழிதலையும், அங்ஙனம் அவர் வீழ்ந்தபோது, தப்பிக் கொள்வதற்குத் தம்பக்கத்தேயுள்ள ஏதேனும் ஒன்றை விரைந்து பிடித்தலையுங் காண்கையில் என் நெஞ்சம் ஆறாத் துயரத்தால் நிரம்பியது. சிலர் ஆழ்ந்த நினைவோடும் நிமிர்ந்து வானை நோக்கிக் கொண்டிருந்த நிலையில், அந்நினைவின் இடையே தெற்றுப்பட்டு விழுந்தும் மறைந்துபோயினர். வேறுபலர் தமக்கெதிரில் மினு மினுவென்று எழுந்தாடும் நீர்க் குமிழிகளைப் பிடிக்க முயன்று அவற்றின்பின் மிகு முயற்சியோடும் ஓடினர். அங்ஙனங் கிட்ட ஓடி அவற்றைப் பற்றிக் கொள்வோம் என்று அவர்கள் நினைந்தவுடனே கால் வழுக்கி வீழ்ந்து அமிழ்ந்து போயினர். இங்ஙனம் எல்லாங் குழப்பமாயிருப்பதற்கு நடுவே சிலர் கையிற் காடுவாளும் வேறுசிலர் அரிவாளும் ஏந்திக்கொண்டு பாலத்தின்மேல் அங்குமிங்கும் ஓடி, அக்கள்ளக் கதவில்லா வழியிலே வந்து கொண்டிருப்பார் பலரைத் தள்ளிச் சென்று அக்கள்ளக் கதவி லே புகுத்தினர்; அவர் வலிவு செய்து தள்ளாவிட்டால் அம் மக்கள் பிழைத்துப்போ யிருப்பர், ஐயகோ!"

66

துயரமிகுந்த அத்தோற்றத்தைப் பார்த்து அதன் மேல் யான் நினைவு அழுந்தப் பெற்றிருத்தலைக் கண்ட அம்முனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/59&oldid=1583485" இலிருந்து மீள்விக்கப்பட்டது