உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

  • சிந்தனைக் கட்டுரைகள்

35

வனதாவி, இத்துணை நாழிகைநேரம் அதனைப் பற்றி நீ நினைந்தது போதுமென்று சொல்லி, 'இனி அப்பாலத்தைப் பார்ப்பது விடுத்து, இன்னும், நீ யறியாத தேதேனுங் காண்பை யாயின் அதனை எனக்குச் சொல்' என்றது. அதன்பின் நான் மேல்நோக்குதலும்‘அப் பாலத்திற்குமேற் பறவைக் கூட்டங்கள் ஓவாது வட்டமிட்டுச் சுழலுதலும் இடையிடையே அதன்மீது வந்திருத்தலும் யாது கருத்துப்பற்றி? கழுகு, எருவை. அண்டங் காக்கை, கடற்காக்கை முதலியனவும், மற்றைப் பறவையினங் களும் இறக்கை முளைத்த சிறுவர் பலரும் இடையிலுள்ள கண்களின் மேல் தொகை தொகையா யிருப்பதுங் காண்கின் றேன்' என்றேன். அதற்கு அவ்வாவி ‘அவைகள் தாம் பொறா மை, பேரவா, மடமை, சோர்வு, காமம் என்பனவும், இன்னும் மக்கள் வாழ்க்கையினைத் துன்புறுத்து கின்ற மற்றைக் கவலை களும் விழைவுகளும் ஆகும்' என்று விடை பகர்ந்தது.

66

'இவ்வாறு சொல்லியபோது நான் பெருமூச்சு எறிந்து யோ! ஆடவன் வீணே படைக்கப்பட்டான்! அவன் துன்பத் ஆ திற்குஞ்சாவுக்கும் இரையாய் ஒழிகின்றான்! வாணாளெல்லாம் வருத்தமுறுகின்றான், கூற்றுவனால் இறுதியில் விழுங்கப்படு கின்றான்!” என்றுரைத்தேன். உடனே அம்முனிவனாவி என்னைப் பார்த்து இரங்கித், ‘துன்பந் தருதன் மாலைத்தாம் அக்காட்சியினைக் காணுதல் ஒழிக' என்று கட்டளையிட்டது. 'என்றும் நிலையுதலுடைய பேரின்பத்தை எய்துதற்பொருட்டுச் செல்லுங்கால் ஆண்மகன் முதலி லடையுந் துன்ப நிலைமை யினை இனி நினையாதே; தன்னகத்தே விழுந்த மக்களைச் சுமந்துகொண்டு அப்பெருக்கு மற்றொரு பக்கத்தேயுள்ள இருட்செறிவிற்சென்று ஒருமிக்கும் இடத்தில் நின் பார்வை யினைச் செலுத்து' என்றது. அது கட்டளையிட்ட வண்ணமே அம் முகமாய் என் பார்வையைச் செலுத்தினேன். அந் நல்ல ஆவி, என்பார்வைக்கு முன்னை யியல்பினும் மேம்பட்ட வலிவைத் தந்ததோ, அன்றி என்கட் பார்வை நுழையாதபடி திணிந்துகிடந்த அவ்விருட் குழாத்தைக் கலைத்துவிட்டதோ அறியேன்; ஏனெனிற் சேய்மைக்கண் உள்ள அம் மற்றொரு முனையில் அந்தப் படுகர் திறப்புண்டு பெரியதொரு கடல் போல் விரிந்திருக்கக் கண்டேன்; அப்படுகரின் நடுவே பெரிய தொரு வைரக் கற்பாறை நெடுக ஊடறுத்து ஓடி அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/60&oldid=1583486" இலிருந்து மீள்விக்கப்பட்டது