உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் 16

இரண்டு ஒத்த கூறாக்கிற்று; அதன் ஒரு பாகத்திற் புயல்கள் மிகச் செறிந்திருந்தமையால் அதன்கண் நானொன்றுங் காணக் கூடவில்லை; ஆயினும், மற்றொரு பாகத்தின் வெளியோ, பழங்களும் மலர்களும் நிரம்பிய தீவுகள் இடையிடையேயுள்ள அகன்ற கடல்போலவும், ஆயிரக்கணக்கான சிறு குடாக்கள் இடையொழுகும் நிலம்போலவும் தோன்றிற்று. அங்குள்ள மக்கள் சிறந்த புதிய ஆடை உடுத்துந், தலையில் நறுமலர்மாலை சூடியும், மரச்செறிவுகளின் நடுவே புகுந்தும், நீர் ஊற்றுக்களின் கரைமருங்கிற் பள்ளி கொண்டுங், கொழுவிய மலர்த்தளிமங் களில் உறங்கியும் இன்பந் துய்த்தலைக் கண்டேன்; பறவைகள் மிழற்றும் இசையும், அருவிவீழ் ஓசையும், மக்கள் குரல் ஒலியும் இசைக் கருவிகளினின்று எழும் ஆர்ப்பும் விரசிய கலவைப் பண்ணுங் கேட்டேன். அவ்வளவு இனியதோர் இடத்தைக் காண்டலுங் களிப்பினால் துளும்புவேனாயினேன். அத்தகைய வளப்பமான இடத்திற்குப் பறந்து செல்ல கழுகின் இறக்கைகள் எனக்கு வேண்டுமென்று விழைந்தேன்; ஒவ்வொரு நொடியும் அப்பாலத்தின்கட்டிறக்கப்படுகின்ற சாக்காடு வாயிலாக வன்றி அதன்கட்புகுதல் முடியாதென்று அம்முனி வனாவி கூறிற்று. 'நின்பார்வை எட்டுமட்டும் அக்கடலிற் புள்ளி புள்ளியாய்த் தோன்றிப், பச்சென்று புத்தப் புதியனவாய் விளங்கும் அத் தீவுகள் கடற்கரை எக்கர் நுண்மணலினும் பலவாயிருக்கின்றன; நீ இங்கே காண்கின்ற இவற்றிற்கும் அப்புறத்தே நின் கட்புலனுக் கும் எண்ணத்திற்கும் எட்டாத நெடுந்தொலைவிற் பல்லாயிரக் கணக்கான தீவுகள் இருக்கின்றன. தாந்தாம் மேற்கொண்ட நல்வினையை அறம் வழுவாது நன்கு முடித்தோர் தகுதிக்கு ஏற்ப இத்தீவுகள் பகுத்துக் கொடுக்கப்பட்டு, மற்று அவர்க்கு இன்ப உறையுளாய்ப் பயன்படுகின்றன; அவைகள் தம்பால் உறைவாரு டைய இன்ப நுகர்ச்சிக்கும் அறிவின் ஏற்றத்திற்கும் ணங்கப் பல திறப்பட்ட ன்பங்கள் செழுமைபெறக் கொண்டு விளங்கு கின்றன. தம்பால் உறைவார்வசதிக்கு இசைந்ததொரு துறக்கநாடு போல் ஒவ்வொரு தீவும் நலந் திருத்தப்பட்டிருக்கின்றது. ஓ முருகவேளே! இச் செழுமையான விடுதிகள் மிக வருந்தியும் பெறற் பாலனவல்லவா? இப்பெற்றித் தான் இன்பவிடுதியைப் பெறுதற்கு, நினக்கு ஏற்றக் காலங்கள் வாய்க்கும் உயிர் வாழ்நாள் துன்பமுடையதென்றுந் தோன்றுமா? அத்தகைய இன்பவுறை யுளுக்கு உன்னைக் கொண்டு போகும்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/61&oldid=1583487" இலிருந்து மீள்விக்கப்பட்டது