உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

L

37

அச்சாக்காடு அஞ்சிக் கடியற்பால தாகுமா? அழிதன் மாலைத் தன்றாய் என்றும் நிலையுதலுடைய வொரு பேரின்பம் இவற்கென்று பொதிந்து வைக்கப் பட்டிருக்கும்போது, ஆடவன் ணே படைக்கப் பட்டான் என்று நினையாதே' என்று மேலும் விரித்துரைத்தது.நானும் அவ்வினிய தீவுகளை உரைவரம்பறியா வரையிலா மகிழ்ச்சியுடன் உவந்து நோக்கினேன். கடைசியாக நான் அதனைப் பார்த்து, வைரப் பாறைக்கு அப் பக்கத்தேயுள்ள கடலைக் கவிந்து விளங்குங் கரிய புயல்களிற் புதைபட்டிருக்கும் மறை பொருள்களையும் ஒருசிறிது விளக்கியருளல் வேண்டும் என்று இரந்து கேட்டேன். அதற்கு அம் முனிவனாவி ஏதும் மறுமொழி தந்திலது; உடனே நான் இரண்டாம் முறையும் அதனைக் கேட்பதற்கு அதன் முகமாய்த் திரும்பியபோது அதனைக் கண்டிலேன்; மறுபடியும் என்னெதிரே கீழ்பாற் றோன்றிய அக்காட்சியினைப் பார்ப்பதற்கு யான் திரும்பிய போது, இத்துணைநேரம் எனது நினைவைக் கவர்ந்த அக் காட்சியும் புலப்பட வில்லை; சுருண்டு ஓடும் நீர்ப் பெருக்குக்குங் கட்பாலத்திற்குங் கொழுந் தீவுகளுக்கும் வேறாகச், சிற்றூர்ப் புறத்துள்ள நீண்ட மலைச்சாரலும், அதன்கண் ஆ ட்டு மந்தையும் ஆனிரையுஞ் செழும்புல் மேய்தலும், அவற்றை மேய்க்கும் இடையர் மரநிழல்களிற் சாய்ந்திருந்து கதைபேசு தலுங் கண்டேன்.

னே அறிவு தெளிந்து என் நண்பன் எங்கே என்று புறந்திரும்புதலும், அவன் என் பக்கத்தே என்னைக் கவன்று நோக்கிக் கொண்டிருந்தான். 'இவ்வளவுநேரம் என்னை விடுத்து நீ எங்குச் சென்றாய்?' என்று மருண்டு வினாயினேன். அதற்கு அவன் ‘நான் எங்குஞ் செல்லவில்லை, நீ சடுதியில் மயங்கிப் படுத்தமையால் நின் பக்கத்தே வருத்தமுற் றிருந்தேன்' என்றான். அதன்மேல் நான் கண்டன வெல்லாங் கனவெனத் துணிந்து நிகழ்ந்தன யாவும் விரித்துக்கூறி இருவேமும் மகிழ்ந்தளவளாய் இல்லஞ் சென்றேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/62&oldid=1583488" இலிருந்து மீள்விக்கப்பட்டது