உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

2. முருகவேள் அறிந்த படைப்பின் வியத்தகு தோற்றங்கள்

நான் திருவனந்த பட்டினத்திற்குச் சில ஆண்டுகட்கு முன் சென்றிருந்தேன். திருவிதாங்கோட்டு அரசர், தம்முடைய ய நாட்டில் உள்ளார் கல்விநலம் பெறுதற் பொருட்டு நிலைப்பித்த அரிய கல்விக்கழகத்தில் அறிவு நூல் ஆசிரியராய் இருந்த செல்வர் ஒருவர் என்னை மனம் உவந்து அழைத்தமையால் யான் அங்குச் செல்லுதற்கு இசைவு வாய்த்தது. இவ்வாசிரியர் ஆங்கிலந், தமிழ், மலையாளம், ஆரியம் முதலான மொழி களில் மிக வல்லுநராய்ப் புகழ் ஓங்கி வந்ததுமின்றி, அரிய இயல் பின் பொலிவானும் நல்லொழுக்கம் உடைமையானும் எல்லா ரானும் உயர்த்துப் பாராட்டப்பட்டும் விளங்கினர். இவர் தமிழ் மொழியாக்கத்திலுந் தமிழ்ப்புலவரிடத்திலும் மிக்க விருப்பம் வைத்துப் பல நலங்கள் செய்து வந்தனர். தமிழில் இதுகாறுஞ் செய்யப்படாத புத்தப் புதிய வொருமுறையைப் பின்பற்றி மனோன்மணியம் என்னுஞ் சிறந்தவொரு நாடகக் காப்பியமும் இயற்றியிட்டார். இப் பெற்றியினரான இவர் திருவனந்த பட்டினத்திற்குப் புறம்பே ஐந்து கல் சேய்மையிலுள்ள சிறிய தொரு பொற்றை மலையின்மேல் தம்முடைய மாளிகையினை அமைத்து அதன்கண் வாழ்ந்து வந்தனர். தாமிருந்த மலையைச் சுற்றிலும் ஏறக்குறைய இரண்டு கல் அகலமுள்ள குறிஞ்சி நிலம் இவர்க்கு உரிமையுடைய தாயிருந்தது. விருந்தினனாய்ச் சென்ற யான் அவராற் பெரிதும் விருந்தோம்பப் பெற்று அவரது இல்லத்தின் கண் ஒரு கிழமை இனிது காலங் கழிப்பேனா யினேன். அங்ஙனம் இருந்த நாட்களில் நாடோறுங் காலையில் எழுந்து அம்மலையின்கீழ் இறங்கிப்போய் அங்குள்ள வளங் களையெல்லாங் கண்டு மகிழ்ந்து மீண்டும் இல்லம் வந்து திரும்பவும் மாலையிற் போய் மீள்வது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/63&oldid=1583489" இலிருந்து மீள்விக்கப்பட்டது