உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

❖ LDMMLDMOELD -16 →

இங்ஙனம் அவ்வியாற்றில் தலை முழுகி எழுந்து ஈரந் துவர்த்திக்கொண்டு அப்புறம் போகையில், அங்கு அகன்ற ஓர் ஏரி காணப்பட்டது. அவ்வேரியின் கரைப் பக்கமாய்ப் போன போது, அக்கரையில் நீர் ஒழுகும் மதகுவாய் கட்டப் பட்டிருந்தது; அவ்வேரியிருக்குமிடமுங் கற்பாறையுள்ள நிலம்; அதன் கண்ணும் நீர் ஓயாமல் ஊறி மதகுவழியாய்ச் சென்று அப்பக்கத்திலுள்ள வயல்களிற் பாய்கின்றது. அவ்வயலெங்கும் நென்முளை தோன்றி இலைவிரிந்து பச்சைப் பசேலென்று ஒரே பரவலாயிருந்தது. அவ்வேரியின் கரை மருங்கில் தென்னந் தோப்புகள் மிகவுங் கொழுமையாய் இருந்தன; சிலமரங்களிற் சிவப்பான இளநீர்க் குலைகளும் வேறு சில மரங்களிற் பசுமையான இளநீர்க் குலைகளுந் தொங்கின; ஏறக்குறைய ஒவ்வொரு தெங்கிலும் மிளகு கொடிகள் சன்னல் பின்னலாய்ப் பிணைந்து ஏறிப் படர்ந்திருந்தன. இவ்வாறு செழிப்பாய்த் தோன்றும் அத் தென்னந் தோப்புகளைக் கடந்து அப்புறஞ் செல்லக், கற்பாறைகள் எங்குஞ் சிதறிக் கிடக்கும் ஆலமரத் தோப்புகள் கட்புலனாயின. வான் அளாவி அடி பெருத்து முடி பரந்த அவ்வாலமரங்களை நோக்கும்போது, என்னுள்ளத்தில் அச்சந்தருவதான ஓர் எண்ணந் தோன்றிற்று. மிகவும் பழைய வாய்ப் போன ஆலமரங்களை அவற்றின் கோடுகளிலிருந்து கீழ் இறங்கும் விழுதுகள் நிலத்திலூன்றித் தூண்கள் போற்றாங்கிக் கொண்டிருந்தன. அம்மரங்களின் பொந்துகளிற் கொவ்வைப் பழம்போல் அலகு சிவந்து மேனியெல்லாம் பச்சென்றிருக்கும் அழகிய பேட்டிளங்கிளிப் பிள்ளைகள் தாம் பொரித்த குஞ்சி னங்களுக்குப் பழங்களைக் கோதிக் கோதி இரை ஊட்டின; ஆண்கிளிகளிற் சில வளார்களில் ஒற்றைக்காலைத் தூக்கிச் சிறு துயில் கொண்டிருந்தன, சில சீழ்க்கை அடித்தன. அவற்றை யெல்லாம் பார்த்துக்கொண்டு அப்புறம் போகப் போகக், கருகலாய் ஒன்றன்மேலொன் றடுக்கடுக்காய் ஒழுங்கின்றி விலங்கிக் கிடக்கும் மலைகள் தோன்றின. அம்மலைகளிற் சிறுத்தைப் புலிகளும் ஓநாய்களும் மிகுதியாக உள்ளன என்று அங்குள் ளோர் சிலர் சொல்லக் கேட்டமையால், அங்கு போதற்கு அஞ்சி மறித்தும் யானிருக்கும் மாளிகைக்கு வந்து சேர்ந்தேன்.

வந்து சேர்ந்தபின் நான் காலையிற் கண்ட குறிஞ்சி நில வளங்களை நினைந்து நினைந்து மகிழ்ந்து, இவை தம்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/65&oldid=1583491" இலிருந்து மீள்விக்கப்பட்டது