உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் 16

ஈனு லாவு மகனு மவன்றருந்

தேனு லாஞ்சொன் மகாருந் திகழ்வரோ."

6

என்றெண்ணி முதல்வன் செய்த வியத்தகு படைப்பில் மக்கள் எவ்வளவு சிறியரா யிருக்கின்றனரென்று உரையிட்டார்! இவ்வாறே, எனக்குமேற் றுலங்கிக்கொண்டிருந்த அளவுபடா வான்மீன் றொகுதிகளை, அல்லது இன்னும் ஆய்ந்து உரைக்குங் கால் அம்மீன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஞாயிறாகுமாதலால் அந்த ஞாயிற்றின் குழாங்களை, அவை தம்முள் ஒவ்வொன் றையுஞ் சூழ ஒருங்கு இயைந்து செல்லுங் கோள்கள் அல்லது உலகங்களொடு கூட்டி நினைந்த காலத்து, இன்னும் இந் நினைவை விரித்து உணரப் புகுந்து, நாங் கண்டுகொண்ட இவ்வானுலகத்திற்கும் அப்பாற் பலவுலகங்களும் புது ஞாயிறு களுஞ் சுழன்று செல்லுதற்கு நிலைக்களனான மற்றையொரு வானுலகம் மேலே உளது என்று எண்ணினேன்; மற்று, இவை தாமும் இன்னும் உயரத்திலுள்ள விழுமிய வான்மீன்களால் துலக்கப்படும் வானின் விளக்கத்தால் ஒளிர்கின்றனவென்பதும் எனக்குத் தோன்றிற்று; இவ் வான்மீன்கள் இப்போது நங் கண்களுக்குச் சிறுத்துத் தோன்றுமாறு போலவே, இந்த ஞாயிற்றின் உலகங்களிலிருந்து பார்ப்பவர்க்கும், இவற்றின் மேலுள்ள இவை சிற்றளவினவாய்த் தோன்றும் வண்ணம் அவை ஒன்றற்கொன்று அத்துணை நெடுஞ் சேய்மையிலே வானிற் பதிக்கப்பட்டு மின்னுகின்றன வென்பதும் எனக்குப் புலப்படுவதாயிற்று. சுருங்கச் சொல்லுங்கால், இங்ஙனம் ஒரு தொடர்பாக யான் எண்ணிக் கொண்டிருக்கையிற், கடவுளாற் படைக்கப்பட்ட இவ்விரிந்த படைப்பின்கண் யான் தாங்கிய இப் புல்லிய வடிவம் எத்துணைச் சிறியதாக இருக்கின்றது! என்று யான் நினைந்து பாராமல் இருக்கக்கூடவில்லை.

66

6

தன்னைச் சூழ ஓடுகின்ற எல்லாக் கோள்களுடனும், நம்முடைய நிலவுலகத்திற்கு விளக்கந் தருவதாகிய ஞாயிறு முற்றும் ஒளிமழுங்கி அழிந்தொழியுமாயிற், கடற்கரை மணலினின்றும் வழுவிப்போன ஒரு சிறு துகளைப்போல் அதன் அழிவும் நமக்கு ஒரு சிறிதும் புலப்படாது போதல் திண்ண மேயாம். ஏனெனில் ஏ இந்த ஞாயிறு சுழலும் வானிடத்தை, வரம்பின்றி விரிந்த வான்முழுதோடும் வைத்து ஒத்துப் பார்க்கும் வழி, அது மிகச் சிறியதாய்க் காணப்படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/67&oldid=1583493" இலிருந்து மீள்விக்கப்பட்டது