உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

43

மாதலால், அச் சிறியவிடத்தில் அஃது இல்லாது ஒழிதல் பற்றி அவ்விடம் வெறுமையாய்த் தோன்றுதல் இல்லை. ஓர் இமைப் பொழுதில் இப் படைப்பின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஓடி இவ்வுலக முழுமையுங் காணவல்லதான நங் கட்பார்வைக்கு, அந்த ஞாயிறு அங்ஙனம் இல்லாது வெறுமையாய்ப் போன இடைவெளி ஒரு சிறிதும் புலப்படா தன்றோ? இனிமேல் நமக்காவது இப்போது நம்மைவிட மிக இ உயர்ச்சியடைந்திருக்கும் உயிர்களுக்காவது இத்தகையதோர் உணர்ச்சி தோன்றினுந் தோன்றும். நாம் நம் வெறிய கண்களாற் கண்டுகொள்ளக் கூடாத எண்ணிறந்த வான் மீன்களைத் தொலைவு நோக்கிக் கண்ணாடிகளின் உதவி கொண்டு அறிந்து வருகின்றோம்; அத் தொலைவு நோக்கிக் கண்ணாடிகள் ன்னும் மேன்மேல் நேர்த்தியாய் அமைக்கப்படுமாயின், அவை கொண்டு இன்னும் புதுமை புதுமையான காட்சிகளைக் காண்போம். தாம் படைக்கப்பட்ட காலந்தொட்டுத் தம் ளிவிரி கதிர்கள் நம் நிலவுலகத்திற்கு எட்டாவண்ணந் தொலைவில் அகன்று கிடக்கும் வான்மீன்கள் இன்னும் பல இருக்கலா மென்று வான்நூலார் ஒருவருந் தங் கருத்து நன்கு அறிவித்தனர். இவ்வுலக முழுமைக்கும்

ஓர் எல்லை வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதனை யாருந் தடுத்து வினாவுதல் வேண்டா வாயினும், அஃது எல்லையில்லாப் பேரருளினால் தூண்டப் பட்ட முதல்வனது அளவிலாற்றலாற் செயப்படுவ தாகலானும், அவ்வாற்றல்தானும் அளவறியப் படாமற் பரம்பிய இடத்தின் கண்ணதாய் நிகழ்வ தொன்றாக லானும் யாம் எம்மனக் கற்பனையால் அதற்கு எங்ஙனம் வரையறை செய்ய மாட்டுவேம்?

ஆதலால், இதனை விடுத்து எனக்கு முதலில் எழுந்த எண்ணத்தைப் பற்றித் திரும்பவும் யான் நினைக்கையில், தனது கண்காணிப்பின் கீழும் தனது பாதுகாப்பின் கீழும் இவ்வகன்று விரிந்த உலக முழுமையினையும் வைத்துப் பெரியதோர் அருட்டொழில் புரியா நின்ற பெருந்தகையான எம்மிறைவன், என்பில்லாப் புழுவினுஞ் சிறியேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக நினைப்பனோ என்று நினைந்து நினைந்து என்மனம் மிகவும் மருண்டது. அளவுபடாது விரிந்து கிடக்கும் இப் பருப்பொருளுலகங்கள் யாங்கணும் பலவேறு வகைப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/68&oldid=1583494" இலிருந்து மீள்விக்கப்பட்டது