உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் 16

எண்ணிறந்த பகுப்புக்க ளுடையனவாய்க் குழுமியிருக்கும் உயிர்த் தொகைகளுள் யானும் ஒருவனாய் ஒழிந்து, அவருடைய அருட்கடைக் கண் நோக்கத்திற் பற்றப்படாத சிறுமையனாய் டுவேனோ என்பதனை எண்ணி எண்ணி அஞ்சினேன்.

இங்ஙனம் மனமடிவினைத் தருகின்ற நினைவினின்றும் நீங்குதற் பொருட்டுத், தெய்வ அருட்டன்மையினை நன்கு அறியமாட்டாச் சிறுமையினால் இந் நினைவு எழுந்தது என்று உணர்ந்தேன். அதுவேயுமன்றி, யாம் ஒரே பொழுதிற் பலவகைப் பட்ட பொருள்களையும் ஒழுங்கு உணரும் அறிவாற்றல் இல்லேமா யிருக்கின்றோம். யாம் சிலவற்றை நன்காராய வேண்டினேமாயின் வேறு சிலவற்றைக் கருதாது ஒழிதலை வேண்டுகின்றேம். எம்மிடத்திற் காணப்படும் இக் குறைபாடு, எம்மைக்காட்டிலும் அறிவாற்றலால் மிக்குயர்ந்த உயிர்களிடத் துஞ் சிறுபான்மை காணப்படுவதாகவே காணப்படுவதாகவே இருக்கின்றது; ஏனெனில் உயிர்களெல்லாம் ஒரு வரம் புட்பட்ட அளவும் அறிவுமுடையவாகலின் என்க. இங்கே படைக்கப்பட்டிருக் கின்ற உயிர்கள் ஒவ்வொன்றும் ஒரு வரையறைப்பட்ட இடத்தின்கண் இருக்கின்றமையின், அவற்றின் அறிவும் அங்குள்ள ஒரு சிலவற்றையே உணரவல்லதாய் இருக்கின்றது. பிறவிகள் ஒன்றன் மேல் ஒன்றாய் உயருந் தகைமைக்கு இசையவே, யாம் இயங்க வுஞ், செய்யவும், அறியவும் நிலைக்களனாயிருக்கின்ற இவ் வுலகத்தின்கண் அவரவர்க்குட் பங்கிடப்படும் நிலவரைப்பும் அவரவர்க்குப் பெருக்க சுருக்க முடையதாகவே பகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.ஆகவே, எவ்வளவுதான் அகன்ற தாயினும் யாமிருக்கும் இந் நிலவுலகத்திற்கும் ஒரு சுற்றளவின் வரம்பு உண்டு. ஆகையால், யாம் இறைவன் தன்மையைப்பற்றி உற்றுணரும்போது, தினைத்துணையுங் குறைபாடு இல்லாத அவனுக்கும் அதனைச் சிறிதாயினுங் கற்பித்துச் சொல்லா மலிருக்கக், குறைபாடு உடையதாய்ப் பழகிவருகின்ற எம்முடைய உள்ளத்திற்குச் சிறிதும் முடிவதில்லை. அவனுடைய தன்மைகள் அளவிடப் படாதனவென்று யாம் எமது பகுத்தறிவால் நன்கு அறிந்த வழியும், எம்மை யறியாமலே எம் உள்ளத்தே இயற்கை யாய் எழாநின்ற சிறிய மனச் சாய்வுகளைப், பகுத்தறிவு மீண்டுந் தோன்றி, முற்ற அகற்றி எமக்கு உதவி புரியுங்காறும், எமது அறிவின் புல்லிய தன்மையானது தன்னால் உணரப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/69&oldid=1583495" இலிருந்து மீள்விக்கப்பட்டது