உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

45

பொருள்களுக்கு ஓர் எல்லை வரையறுத்துச் சொல்லாமலிருக்க இசைவதில்லை.

ஆகையால், இறைவன்றான், பலவேறு வகைப்பட அளவின்றி விரிந்த பொருள்களின் ஊடே யெல்லாம் ஊடுருவி நின்று இடையறாது பெரியதோர் அருட்டொழில் புரிகின்ற வனாகக் காணப்படுதலின், அவனுடைய கடைக்கண் நோக்கத் திற்கு ஒரு சிறியேனாகிய யான் எங்ஙனம் பொருளாவேன் என்று எழுவதான துயர நினைவை முழுதும் ஒழித்துவிடக் கடவே னாக; ஏனெனில், எல்லா விடங்களிலும் ஊடுருவியிருந்து எல்லாம் அறிய வல்லவனான அவனது பேராற்றலுக்கும் பெருந் தன்மைக்கும் யாம் அவ்வாறு எண்ணுதல் ஓர் இழுக்கமாகலின்

என்க.

மு

அவன் எங்கும் ஊடுருவி நிற்பவனாய் விரிந்திருத்தலை ஓருங்கால், அவனது அருளாற்றல் இவ்வுலக வுடம்பு முழுமை யும் நுழைந்து, அதற்கு ஒரு களைகணாய் நின்று அதனை இயக்கா நிற்கின்றமை இனிது புலனாகும். தன்னாற் படைக்கப் பட்ட படைப்பின் ஒவ்வொரு பிரிவிலும் அவன் நிறைந்திருக் கின்றனன். அவன் படைத்தவற்றுள் அவன் இராத மு மில்லை, அவனுக்கு எட்டாமல் அகன்றிருப்பது மில்லை, அவனுக்குத் தெரியாமல் நுண்ணிதாயிருப்பதும் இல்லை, அவனால் ஒரு பொருட்டாக எண்ணப் படாததும் இல்லை. அறிவுடையது அறிவில்லது என்று பகுக்கப்பட்ட இருவகை யுலகின் உட்பொருளிலும் அவனது அருள் உள் நின்று அவற்றோடு ஒருமித்திருக்கின்றது. அவன் ஓரிடத்திருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்வனாயினுந், தான் படைத்தவற்றுள் ஏதேனும் ஒன்றிலிருந்தாவது, அளவுபடாது பரம்பிவிரிந்த இவ்வெளியின்கண் ஒரு பகுதியிலிருந்தாவது தன்னை வேறு பிரிப்பனாயினும், அஃது அவன் வரம்பில் ஆற்றற்கு ஓர் இழுக்காகவே முடியும். சுருங்கச் சொல்லுங்கால், இறைவன் எங்குமி ருக்கின்றான் என்பது மட்டும் விளங்கு வதன்றி, அவன் எதுவரையில் நிறைந்து நிற்கின்றான் என்பது ஒருவாற்றா னும் அறியப்படுவ தில்லையென்க.

66

"இனி, அவன் எங்குமிருக்கு மியல்புடையனாதல் போல வே, எல்லாம் அறியும் வல்லமையு முடையனென்பதும் இனிது விளங்குகின்றது. அவன் எங்கும் உண்மையினாலேதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/70&oldid=1583496" இலிருந்து மீள்விக்கப்பட்டது