உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

❖ LDM MLDMшLD -16

எல்லாம் அறியும் அறிவும் இயற்கையாய் ன்றியமை யாததாய்ச் சுரந்து பெருகுகின்றது. அங்ஙனம் அல்லாக்கால் அவன் நிறைந்திருக்கும் இவ்வுலக முழுமையும் நடைபெறுகின்ற தொழிற் கூறுகள் ஒவ்வொன்றனையும் அவன் எங்ஙனம் அறியமாட்டுவான்? தான் ஒருமித்திருக்கும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் எழுகின்ற அறிவின் கூறுகள் ஒவ்வொன்றனையும் எங்ஙனம் உணரமாட்டு வான்? சிலர் இவ்வுலக அமைப்பினைப் பற்றிப் பேசியக்கால், இஃது அவற்கு ஓர் உறைவிடமாமென்றும், அவனது அருள் அமிழ்தம் நிரம்புங் காள்கலமாமென்றுங் கூறினார்கள். அறிவு நூலாசிரியர் வேறொருவர், இவ்விரிந்த வெள்ளிடையை உற்று ணர்ந்து இஃது இறைவனது அருளுணர்வு அமர்ந்திருக்கும் பெருங் களமாமென்று கூறினாராகலின், அஃதொன்றுதான் மிக வுயர்ந்த மேலான கருத்தாய்த் தோன்றுகின்றது. தம்மோடு அண்டையில் நிற்கும் ஒருசில பொருள்களின் இருப்பையும் இயக்கத்தையும் அறியும் ஐம்பொறியுணர்வின் இருப்பிடம் விலங்குகளுக்கும் மக்களுக்கும் உண்டு. அங்ஙனம் அவர் அறியும் அறிவும் உன்னிப்பும் மிகக் குறுகிய ஓரிடத்தினுள் மட்டுமே சுழன்று நிகழ்கின்றன. ஆனால் இறைவனோ தான் உறைகின்ற எல்லாப் பொருள்களையும் அறியுங் கடப் பாடு மேற்கொண்டு விளங்குகின்றானாகலின், அவன் எங்குமுள்ள பெருவெளியே அவனது எல்லையற்ற அறிவு நிகழ்ச்சிக்கு இடந்தருவதா மென்பதும், அஃது அவனது முற்றுணர்வு நிகழ்ச்சிக்கு இன்றி யமையாத ஒரு கருவிபோல் ஆவதாம் என்பதும் அறிதல் வேண்டும்.

உடம்போடு ஒற்றுமைப்பட்டுத் தோன்றும் ஓர் உயிர் அதனினின்றும் விடுபட்டு, மனத்தினுங் கடுகிச் சென்று இப் படைப்பின் எல்லையைக் கடந்து, பலகோடி யாண்டுகளாக ஒரு பெற்றிப்பட ஏகி இவ்விரிந்த வெளியின் அப்பாற்போய்க் கழியினும், அது பின்னும் இறைவனால் அகத்திடப்பட்டுத் திருவருள் வெளியால் தான் சூழப்பட்டிருத்தலைத் தெற்றென அறிந்து கொள்ளும். யாம் உடம்பொடு கூடி ஒருமைப்பட்டுத் தோன்றுகின்ற காலத்தும், அவன் எங் கட்புலனுக்கு விளங்கிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/71&oldid=1583498" இலிருந்து மீள்விக்கப்பட்டது