உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

47

றிலனாயினும், எம் அகத்தே விளங்கி யமர்ந்திருக் கின்றான் என்பது திண்ணமேயாம். இதுபற்றியன்றே

காரைக்கால் அம்மையார்,

"அன்றுந் திருவுருவங் காணாதே யாட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ னும்பிரா னென்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவ மேது

என்று அருளிச் செய்வாராயினர். மற்றோர் அன்பர் “ஓ என் அரசே, நின்னை யான் எங்ஙனங் காண்பேன்! நின்னைக் காணும் பொருட்டு முன் ஓடினேன்; அங்கும் நீ வெளிப்படுகின் றிலை; பின் ஓடினேன்; அங்கும் வெளிப்படுகின்றிலை, நீ பணி செய்யும் இடப்பக்கத்திற் றிரும்பினேன். அங்குங் காணப்படு கின்றிலை; வலப் பக்கத்திற் றிரும்பினேன். யான் காணக்கூடா தென்றே நின்னை அங்கும் ஒளித்துக் கொள்கின்றனை! நின் கள்ளம் ருந்தவாறென்னே!" என்று நெஞ்சங் குழைந்து விளம் பினார். சுருங்கச் சொல்லுங்கால், எமக்கு, அறிவினுள் அறிவாய் நின்று அவன் உணர்த்து தலானும், அருட்குருவாய்க் கண்முற் றோன்றி அறிவுறுத்து தலானும், அவனை நாங் காணாவிடினும், அவன் எமக்குள் விளங்குதல் ஒருதலையென்று உறுதியாக உணர்ந்தேன்.

66

ங்ஙனம் எல்லாம்வல்ல இறைவனுடை றவனுடைய அருள் நிறைவு அருளறிவுகளின் எங்குமுள்ள இயல்பினை நான் ஆழ்ந்து நினைக்கையில், ஆறுதல் பயவாமற்றை நினைவு களெல்லாம் என் உள்ளத்தினின்றும் ஒருங்கே மறைந்து ஒழிந்தன. முதன்மையாய், எங்கே நம்மை இறைவன் குறியாது விடுகின்றனனோ என்று அஞ்சுகின்ற உயிர்களையும், இன்னும் மற்றை எல்லா உயிர்த் தொகைகளையும் அவன் திருவுளம் பற்றாது இருப்பான் அல்லன். எமக்குள் நிகழும் எல்லா நினைவுகளுள்ளும் அவன் மறைவாய் எழுந்தருளிக், குறிப்பாய் என்னை இப்போது கவலைப்படுத்து வருத்துகின்ற என்னெஞ் சத்தி னுள்ளுமிருந்து அருளமிழ்தம் பொழிந்து எம்மைக் கடைக்கணிக்கின்றான். அவன் தன்னுடைய ய உயிர்கள் எவற்றையும் கடைக்கணியாது விடுதல் இயலாமையால், மிகவுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/72&oldid=1583499" இலிருந்து மீள்விக்கப்பட்டது