உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

3. முருகவேள்

கனவிற்கண்ட துன்பமலை

"மக்கட்கு நேருந் துன்பங்கள் எல்லாம் ஒருங்கு திரட்டி ஒருதுறைப் படுத்து எல்லார்க்கும் ஏற்றத் தாழ்வின்றி ஒரு நிகராகப் பங்கிடப்படுமாயின், தம்மை இப்போது நல்வினை யற்றவராக நினைந்திருப்பார் பலரும், அங்ஙனந் தமக்குப்

பங்கிடப்படுங் கூறு பெறுதற்கு முன்னரே, தமக்கு முன்னுள்ளதே போதும் போதுமென்று கூறியமைவர் என்னும் ஓர் அரிய கருத்தைச் சான்றோர் ஒருவர் வெளியிட்டார். ஏனையொரு சான்றோர் இக் கருத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்த்து, 'எமக்கு நேரும் இடர்களுந் துன்பங்களும் மற்றையோன் ஒருவனுக்கு நேர்வனவற்றைக் காட்டினும், எம்முடைய நுகர்ச்சிக்கு இசைந்தனவாய் இருக்கின்றன வென்பது அவனுடன் எமக்குள்ளவற்றை மாற்றிக் கொள்ளக் கூடுமாயின் நன்கு புலப்படும்' என்று இன்னும் நுணுக்கமாக அதனை எடுத்து மொழிந்திட்டார்.”

66

இவ்விரு கருத்தினையும் பற்றி நினைந்தவாறே நான் எனது சாய்மானக் குறிச்சியில் இருந்தபோது, என்னை யறியாமலே அயர்ந்ததோர் உறக்கம் என்னை வந்து கவிந்தது.” சடுதியிலே யான் என்றுங்கேளாத ஒரு புனித ஒலி என்முகமாய் வந்தது. அஃதென்னை என்றறியக் கண்விழித்துத் தென்றிசைப் பக்க மாய்க் காண்கையிற், பச்சை மஞ்சளைப் பிளந்தாற்போலப் பசுங் கதிர் பொழியும் அரசிருக்கை மண்டபம் ஒன்று தோன்றிற்று; அது நாற்பக்கங்களிலும் பொற்சுவர் எழுப்பி முகடு பொற்றகடு வேய்ந்து அமைக்கப்பட்டிருந்தது; கொழுமையான செம்பவளத் தாற் கடைந்து திரட்டிய நூறு தூண்கள் அங்கு நிறுத்தப்ட்டிருந் தன. கீழே வழுவழுப்பாக இழைத்த வெள்ளைச் சலவைக் கற்க ளின் பொருத்துவாயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/74&oldid=1583501" இலிருந்து மீள்விக்கப்பட்டது