உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் 16

நீலமணிகள் அழுத்திப் பதிக்கப்பட்டிருந் தன. மேலே, பொற்சரிகை பின்னிய வெண் பட்டாடை படங் காகக் கட்டப்பட்டிருந்தது. யான் இந்நிலவுலகத்திற் கண்டறி யாத மலர்கள் ஆங்காங்கு விடு பூவாகச் சிதறிக்கிடந்து ஒரு புனித மணங் கமழ்ந்தன. இவ்வாறு எல்லாந் தெய்வத் தன்மையுடையன வாய் விளங்கும் அம் மண்டபத்தின் நடுவிற் சய்த

கண்ணொளி மழுங்க முழுமணி குயிற்றிச் அரியணையொன்று இடப் பட்டிருந்தது. முதன் முதல் அதனைப் பார்க்கையில் அதன்மேல் யாருமின்றி அது வறிதாய்க் காணப்பட்டது. இவ்வாறே அம் மண்டபம் எங்கும் யாருமின்றி வெறுமையாயிருந்தது. இஃதென் னை யென்று வியந்து உற்று நோக்குகையில், வைகறை மூடுபனி யைக் கீறிக்கொண்டு இளஞாயிறு தளதளவென்று தோன்றுதல் போலப் புனித அருட்டிரு மேனியுடையவராயுங், காதிற் சங்கக் குழை துலங்குபவராயும், முறுக்கவிழ்ந்து இதழ்விரிந்த செந் தாமரை போன்ற முகமும் அருள் ஒழுகு விழிகளும் விளங்கப் பொருப்பென அகன்ற திருப்பவள மார்பில் முத்தலைவேல் ஏந்தினவராயும், பிறைக்கொழுந்து நகுஞ் சிவந்த சடைக்கற்றை முடியுடையவராயும் உரை வரம்பமையாப் புரைபெருந் தோற்றத் துடன் அறக்கடவுள் அவ்வரியணை மீது அமர்ந் திருக்கும் நிலை கட்புலனாயிற்று. உடனே அவர் பக்கத்தில் நோக்கினேன்; ஆண்டு உரையால் அளப்பரிய பலவேறு உருவங்கள் உடைய ரான பணியாளர்களும் பிறரும் அச்சக் குறிப்புத் தோன்ற ஆங்காங்கு வாய்புதைத்து வரிசை வரிசையாய் நிற்றலுங் கண்டேன். அவ்வறக்கடவுளுக்கு எதிரே நிறைகோல் ஒன்று தூக்கப்பட்டிருந்தது. அதுகண்டு, நடுநிலை வழாது அவரவர் வினை நுகர்ச்சிகளை அளந்தறியும் அக்கடவுள் திருவுளப் பாங்கினை அறிவுறுத்தும் அடையாளம் இதுவோ என்று நினைந்தேன். இங்ஙனம் யான் எண்ணிக் கொண்டிருக்கின்ற அளவிலே, “அக் கடவுள் தந் திருவாய் மலர்ந்து ஒருபக்கத்து நெருங்கியிருந்தாரை நோக்கி, 'ஒவ்வோர் ஆடவருந் தத்தம் இடர்களையுந் துன்பங்களையுங் கொண்டுபோய், உதோ! தோன்றும் இடைவெளியிற் குவிக்கக் கடவர்' என்று கட்டளை யிட்டு, ளை யிட்டு, இதற்கென்று வரைந்து வைக்கப்பட்டிருந்த ஒரு வெளி நிலத்தைக் குறிப்பிட்டார். குறிப்பிடுதலும், அங்கு நிகழ்வன வற்றைக் காண்டற் பொருட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/75&oldid=1583502" இலிருந்து மீள்விக்கப்பட்டது