உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

51

நான் விரைந்து சென்று அப் பொட்டைத்திடல் நடுவில் நின்றுகொண்டு மிக மகிழ்ந்து நோக்கும்பொழுது, அங்குக் குழுமியிருந்த மக்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராய் நடந்து வந்து, தாந்தாஞ் சுமந்து போந்த பல்வகைச் சுமைகளையும் அவ்வெளியில் இறக்கிக் குவித்தனர். அக் குவியல் முழுதும் ஒன்று சேர்ந்து முகில்மண்டிலத்தை ஊடுருவிக் கொண்டு மலைபோல் உயர்வதாயிற்று.'

66

அங்கு அக்கடவுள் இ கட்ட ளையை நடைபெறு வித்தற்பொருட்டுப் பூங்கொம்புபோன் மெலிந்து, ஊதினாற் பறக்கும் உடம்பினளான ஓர் இளம்பெண் மிகவுஞ் சுறு சுறுப்பாய் அங்குமிங்கு முலவினள்; அவள் கையொன்றிற் பெருக்கக் கண்ணாடி ஒன்றிருந்தது. அவள் தளர உடுத்திருந்த நீண்ட ஆடை காற்றில் அலையும்பொழுது, அதன் இடையே பின்னப்பட்டிருந்த பல்வேறு பேய் உருக்களுங் கூளி உருக்களும் ஆயிரங்கோளாறான வடிவங்களைக் காட்டின. அவளது பார்வையில் எத்தகையாரும் வெருவுதற்குரிய கொடுந் தடுமாற் றக் குறிப்புகள் காணப்பட்டன. அவள் பெயர் வீண் எண்ணம் எனப்படும். அப்பெண் அங்கு ஒவ்வோர் ஆளுக்கும் உரிய சுமையினை நிரம்பக் கிளர்ச்சியோடும் பொதிந்து அவர்தம் தோள்களில் ஏற்றி ஒருவர்பின் ஒருவராய் அவரைக் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும்படி நடத்தினாள். என்னோடு ஒரு பிறப்பினரான மக்கள் இங்ஙனந் தங்கடங்கட்குரிய சுமையினைச் சுமந்தவுடன் அவற்றின் பொறை பொறுக்க மாட்டாமற் கதறு தலை என் கண்ணெதிரே காணவும், எனக்கு முன்னே குவிக்கப்பட்ட மக்கட்டுன்பமலையினைப் பற்றி நினைக்கவும் என் நெஞ்சங் கரைந்து உருகிற்று.”

இங்ஙனமாயினும், அந்நேரத்தில் அங்கு வேறு சிலர் செய்த செய்கைகளால் எனக்கு மிகுந்த களிப்புண்டாயிற்று. ஒருவன் ஒரு பழைய சரிகை யாடையில் ஒரு பொதியை நிரம்ப உன்னிப்பாய் மறைத்தெடுத்து வருதலைக் கண்டேன்; வந்தவன் அப்பொதியினை அக் குவியன்மேல் எறிகையில் அது வறுமை என்று தெரிந்தேன். மற்றொருவன் நிறைந்த செருக்கொடு நடந்து போந்து தன் மூட்டையினை யெறிய, அதனை ஆய்ந்து நோக்கினேற்கு அஃதவன் மனைக் கிழத்தியாய்க் காணப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/76&oldid=1583503" இலிருந்து மீள்விக்கப்பட்டது