உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் 16

இன்னும் அங்கே கணையுந் தீங்கொழுந்தும் நிறைந் தனவும் வீண் எண்ணங் கொண்டனவும் ஆன மூட்டைகள் சுமந்தனராய்க் காதலிளைஞர் பலர் தொகுதி தொகுதியாக வருதலுங் கண்டேன்; இங்ஙனங் கண்ட காட்சியில் உண்டான பெரும் புதுமை என்னென்றால் அவ்வாறு வந்த காதலுள்ள முடையார் அப்பெரிய இடர்ப்பொதியின் பொறையால் தம் உள்ளம் இருபிளவாய் அழிவதுபோல் நெட்டுயிர்ப்பெறிந்தன ராயினும் அக் குவியலின் அருகே வந்ததுந் தம் மூட்டைகளை எறிந்துவிட மனமிலராய் வருந்தி நின்றனர்; பின்னர்ச் சிறிது ணே வருந்தி முயன்று பார்த்தபின், தந்தலைகளை அசைத்துக் கொண்டு வந்தது போலவே பொறை சுமந்தனராய் அப்புறம் போயினர். இன்னும் அங்கே பெருமுதுமகளிர் பலர் தம்முடம் பின் திரைந்த தோல்களை எறிந்து விடுதலும், இளையமகளிர் பலர் தம் முடம்பின் பழுப்பான நிறமுடைய தோலை உரித்து எறிதலுங் கண்டேன். இன்னும் அங்கே சிவந்த மூக்குகளும், பருத்த உதடுகளுங், கறைப்பற்களும் பெரும் பெருங் குவியலாய்க் கிடந்தன. இவ்வாறு மிக உயர்ந்து ஓங்கிய அத்துன்ப மலையிற் பெரும்பாலும் அழகில்லாத உடம்பி னுறுப்புகளே விரவிக் கிடத்தலைக் காண்டலும், உண்மை யாகவே எனக்குப் பெரிய தோர் இறும்பூது எழுவதாயிற்று. இங்ஙனம் நான் இறும் பூதுற்றுக் காண்கையில், ஒருவன் ஏனையோரைக் காட்டிலும் பெரும்பொறை தாங்கினனாய் அவ் விடர்ப் பொருப்பின் அருகே நெருங்கிப் பெரிது எழுந்த மகிழ்ச்சியோடு அதனை வீசி எறிந்தான்; எறிதலும், அஃதவனுக்கு இயற்கையே முதுகிலுள்ள பரிய முரிப்பின் தசையென்று கண்டுகொண்டேன். இதுபோலவே இன்னும் அங்கு எல்லாவகையான உடம்பின் சீர்கேடு களும் குவிக்கப் பட்டிருந்தன; என்றாலும், அச்சீர்கேடுகளிற் பெரும்பாலான உண்மையல்ல வென்பதூஉம், அவரவர்தம் வீண் எண்ணத்தாற் பிறந்தனவா மென்பதூஉம் யான் இனிதறிவேனா யினேன். இனி, மக்கட்கு இயற்கையே உண்டாகும் நோய்கள் முழுமையுஞ் சேர்ந்த கலவைச் சிறுபொறி யொவ்வொன்று அழகிய மக்கள் பலப்பலர் கையிலும் இருக்கக் கண்டேன்; இச் சிறுபொதியின் பெயர் சினம் என்று சொல்லப்படும். இனி, இங்கு இவை யெல்லாவற்றினும் எனக்குப் பெரியதொரு வியப்பினை யுண்டுபண்ணிய தொன்றுண்டு; அஃதென்னை யெனின்,

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/77&oldid=1583504" இலிருந்து மீள்விக்கப்பட்டது