உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

53

முழுக்குவியலிலும் மடமை ஒன்றாவது, பொல்லாங்கு ஒன்றாவது எறியப்படவே இல்லை: இதனால், அரிதிற்கிடைத்த இந் நேரத்தில் மக்கள் ஒவ்வொருவருந் தங்கடங்கட்கு வேண்டாதனவா யுள்ள கொந்தளிக்கும் விழை வுகள் மனச் சாய்வுகள் மனநொய்ம்மைகள் முதலானவற்றை விலக்கிக் கொள்ளுகின்றிலரே! என உள் நினைந்து வியந்தேன்.

இவற்றிற்கு இடையே, தான் இழைத்த குற்றங்களைச் சுமந்து கொண்டு வந்த பெருங்காவாலி ஒருவனைக் குறிப்பாய் நோக்கினேன்; அவன் வீசிய வீசிய மூட்டை மூட்டையை ஆராய்ந்து பார்க்கையில், அவன் தன் குற்றங்களை நீக்கி விடுவதற்கு மனமின்றித் தன் நினைவை மட்டும் எறிந்து போயினானென்பது தெற்றென விளங்கிற்று. அவற்குப் பின்னே பயனற்ற வீணனான பட்டிமகன் ஒருவன் விரைந்து போந்து தன் மடமையை எறிதல்விட்டுத் தன் நாண்டகைமையையே வீசிப்போயினான்.

ங்ஙனம் மக்கட்தொகுதி முழுதுங் தம்முடைய அரும் பொறைகளை இறக்கிச் சென்றபின், இந்நேரத்தில் இதனை நடைபெறுவித்தற் பொருட்டு உலாவிக் கொண்டிருந்த ஒரு சூர் அணங்கு தன்னந்தனியனாய் இக்காட்சியினைப் பார்த்துக் கொண்டு வறிதேநிற்கும் என்னருகே வந்தது; வருதலும் எனக்கு ஒரு மனத்தடுமாற்றம் உண்டாயிற்று; சடுதியில் அவள் தன் கையிற் பிடித்திருந்த பெருக்கக்கண்ணாடியினை என் கண்களி னெதிரே நேராகப் பிடித்தனள். அதில் உடனே என் முகத்தைக் காண்டலும், மிகச் சிறிதாயிருந்த அவ்வடிவம் இப்போது மிகப் பெரிதாய்த் தோன்றுவதைக் கண்டு மருண்டேன். இவ்வெதிர்த் தோற்றத்தின் வரம்பு கடந்த உறுப்பின் அகலத்தை நோக்க நோக்க என் உருவத்தின்மேல் எனக்கே வெறுப்புண்டாயிற்று; அதன்பின் அதனை முகமூடியைப்போல் என்னினின்றும் வீசியெறிந்தேன். இப்போது எனது நல்வினையால் என் அருகே நின்ற ஒருவன் தன் முகம் மிக நீண்டதாயிருந்தமைகண்டு, சிறிது முன்னே அதனை அம் மக்கட் டுன்பமலைமேற் பிடுங்கி யெறிந்து விட்டு நின்றுகொண் டிருந்தான். உண்மையிலேயே அவன் முகம் நாணத் தக்கவகையாய் மிக நீண்டுதான் இருந்தது. வாய்மையே பேசுங் கால், அவன் மோவாய் மட்டும் என் முழு முகத்திளைவு பெரிதாயிருந்தது என்று நம்புகின்றேன். நாங்கள் இருவேமும் எங்கள் உறுப்பின் அழகின்மையைத் திருத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/78&oldid=1583505" இலிருந்து மீள்விக்கப்பட்டது