உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

❖ LDMMLDMOLD -16 →

காள்வதற்கு நல்லநேரம் வாய்த்தது. எல்லாரும் தாந்தாந் தர வேண்டுவன வற்றைத் தந்து போகட்ட மையால், ஒவ்வொருவரும் தமக்குள்ள குறையினை மற்றைப் பிறரொடு மாற்றிக்கொண்டு நிறைவு செய்துகொள்ள பெறுவாராயினர்.

டம்

இங்ஙனம் மக்களெல்லாரும் தத்தமக்குரிய துன்பங் களினின்றும் விடுதிபெற்றமை கண்டு உரையளவு கடந்த உவகை எய்தினேன். இவ்வாறு அப்பொழுது நாங்கள் எல்லேமும் அக்குவியலைச் சூழ்ந்து நின்று கொண்டு, அதிற்சேர்ந்து கிடந்தவற்றைப் பார்த்தேமாயினும், தமக்கு வாணாளிற் பெறும் இன்பமும் நலமும் இக் குவியலில் இவைதா மென்று தெரிந்து கொள்ளாமல் நின்றோர் அப் பெருங்குழாத்தில் யாருமே இலர். இப்படியாயின், இவற்றிற்கு இயற்கையிலே உரிமையுடையோர் இவற்றைத் துன்புறுத்தும் பெரும் பொறையாகக் கொண்டவா றென்னையென்று நினைந்து நினைந்து வியப்படைந்தேன்.

இவ்வாறு, இத்துன்பக் குழம்பலையும் அலைசலையுங் கருத்தாய்ப் பார்த்து எண்ணியவண்ணமாய் யான் நிற்கையில், அத்தாணி மண்டபத் தரியணைமீது அமர்ந்தருளிய அறக் கடவுள் தந் திருவுளமுவந்து, 'இப்போது ஒவ்வொருவருந் தாந் தாம் விரும்புமாறு தமக்குள்ள துன்பத்தை மாற்றி, அக்குவியலி னின்றும் பிரித்தெடுத்துக் கொடுக்கப் படுவதை மூட்டைக் கட்டிக் கொண்டு தமது இருப்பிடஞ் சேரலாம்' என்று இரண்டாமுறையும் ஒரு கட்டளையிட்டருளினார்.

இக்கட்டளை பிறத்தலும், வீண் எண்ணம் என்ற அப்பெண் திரும்பவுஞ் சுறுசுறுப்பாகத் தொழின் முயற்சியிற் புகுந்து, அத்துன்பக்குவியல் முழுமையும் அவரவர்க்கு வேண்டும் வகையாற் பகுத்துப்பகுத்துச் சுமை கட்டி, நம்பவியலாத விரைவுடன் அவரவர்க்குரிய மூட்டையை அவரவர் தோள்மேல் ஏற்றி விட்டாள். இப்போது கிளம்பிய அலைசலையும் விரைசலையும் அள விட்டுரைத்தல் முடியாது. இந்நேரத்தில் நான் கண்டறிந்த சிலவற்றை உலகிற்கு வெளியிடுகின்றேன். போற்றக் தக்க நரைத்தோற்றம் உடையனான முதியோன் ஒருவன் தனக்கிருந்த அடிவயிற்று நோயை வீசி எறிந்த பின், தன் காணி யாட்சிக்கு உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/79&oldid=1583506" இலிருந்து மீள்விக்கப்பட்டது