உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

.

55

பெறுதற் பொருட்டு எடுப்புப்பிள்ளை வேண்டியிருந்தமையின், அக்குவியலில் தந்தையால் வெகுண்டு எறியப்பட்ட கடன் றவறிய மகன் ஒருவனை விரைந்தெடுத்தனன். அங்ஙனந் தெரிந்தெடுக்கப்பட்ட நன்றி யில்லா நன்றி யில்லா இளைஞன் கால்மணி நேரத்திற்குள் அம்முதியோன் தாடியைப் பிடித்து இழுத்து அவன் மூளையைத் திறந்து சிதறி அடிக்க விரும்பினான். இதனால் வெருக் கொண்ட அம்முதியோன், வயிற்றைப் பிசைந்த வண்ணமாய் வருந்தித் தன்னெதிரே வந்த அப்பையன் தந்தை யைப் பார்த்து ‘நின் மகனை எடுத்துக்கொண்டு பெயர்த்தும் என் வயிற்றுவலியை எனக்குக் கொடுத்து விடு என்று மிக இரந்து வேண்டினன். வேண்டியும் என்னை? அவர் ருவருந் தாம் தெரிந்தெடுத்துக் கொண்டவற்றை மறித்துந் தம் தண்ணப் படியே மாற்றிக் கொள்வதற்கு வலிவற்றவரா னார்கள். தோணியில் தண்டுவலிக்கும் வேலையிலிருந்த ஏழை அடிமை ஒருவன் தன் கால் விலங்கினைக் கழற்றி யெறிந்து விட்டு, அதற்கு மாறாகப் பொருத்துப் பிடிப்பு நோயைத் தெரிந்து எடுத்துக் கொண்டனன். கொண்டபின் முகஞ்சுளித்து மிக வருந்தின மையால், அவனும் இக்கொடுக்கல் வாங்கலில் ஊதியம் பெற்றா னல்லனென்பது நோக்குவார்க்கெல்லாம் எளிது விளங்கும். இன்னும் இவ்வாறே, அங்கு வறுமைக்கு மாறாக நோயினையுஞ் செரியாமைக்கு மாறாகப் பசியினையும், துன்பத்திற்கு மாறாகக் கவலையினையுங் கைக்கொண்டு பலவகைப் பண்டமாற்றுகள் நிகழ்ந்தமை கண்டு மிகவுந் களிப்புண்டாயிற்று.

னிப், பெண்தொகுப்பாருந் தம்முள் ஒருவரொருவர்க் குரிய உறுப்பின்வடிவுகளை மாற்றிக் கொண்டு நிரம்பவும் முயற்சியாய் வாணிகஞ் செய்தனர். ஒருத்தி தன் ஒருபிடி நரைமயிரைக் கொடுத்து ஒரு பிளவை கட்டியை வாங்கிக் கொண்டாள்; மற்றொருத்தி தன் சிற்றிடையினைக் கொடுத்து திரண்டுருண்ட இரண்டு தோள்களை எடுத்துக்கொண்டாள். வேறொருத்தி தன் கற்புடைமையினைத் தந்து தன் அழகுகெட் முகத்தினை திருத்தி

வாங்கிக்கொண்டாள்; ஆயினும், ங்ஙனஞ் செய்துழியெல்லாம் புதுக் குறைப்பாட்டினுக்கு உரிமை கொண் டார் பலருள்ளும் ஒருவரேனும் அடுத்த நேரத்திலேயே அது பழைய குறையைக் காட்டினும் டர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/80&oldid=1583507" இலிருந்து மீள்விக்கப்பட்டது