உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் -16

பயப்பதாதலை விளங்க அறியாமை இல்லை. இவ்வாறே அக்குழுவிலுள்ளார் ஒவ் வொரு வருந் தமக்கிருந்த பழங்குறைக்கு மாறாகப் பெற்ற புதுக் குறையினால் மகிழ்தலின்றி ஒரு தலையாக இடருழத் தலையே கண்டு வருந்தினேன். ஆனாலும், நமக்கு எய்தும் இடர்கள் அனையவும் நாம் பொறுக்குமளவில் நம் வலிவுக்கு இசைய அளவாக வகுத்துப் பொருத்தப் படுகின்றனவோ, அன்றி அவை பழகப் பழக நம்மால் தாங்கப்படும் இயற்கையவாய் இணங்கு கின்றனவோ இன்னதென்று நிலையிடுதற்குப் புகுந்தேன்.

இனி, அங்கு முன்மொழிந்த கூனன் ஒருவன் தன் முதுகிலிருந்த இமிலைப் போக்கிவிட்டுச் சிறுநீர்ப் பையிற் கல்லொன்று இடுவித்துக்கொண்டு உருவம் மிகத்திருந்தி ஒழுங்காய்ப் போதலையும், இவனோடு இவ்வாறு மாற்றிக்

காண்ட அழகிற்சிறந்தான் ஒருவன் தான் முன்னே மகளிரால் நன்கு புகழப்பட்ட அழகிய நல்லுருவத்தை இழந்து, அம்மகளிர் கூட்டத்தினூடே தன் தலைக்குமேல் தன் இரண்டு தோள்களும் பிதுங்கக் கூனி நடந்து போதலையுங் கண்டு இரக்கம் மிகுந்து என் நெஞ்சம் நெக்குடைந்தது.

இதற்கிடையில் நான் எய்திய ஊதியத்தின் இயல் பினையுங் கூறாதுவிடுதலின்றி விளம்பி விடுகின்றேன். நீண் முகமுடைய னான என் நண்பன் என் சிறிய முகத்தைத் தான் வாங்கிக் கொண்ட துணையானே மிகவுங் கோணங்கியான வடிவமு டையனாய் நிற்றலைக் காண்டலும், என் முகத்தை நானே கொடுத்து அவனை வெட்கப்படுத்தி விட்டதனை எண்ணித் தாங்கமுடியாமற் சிரிப்பேனாயினேன்; அன்னோ! அந் நண்பன் நான் பகடிபண்ணுதலைத் தெரிந்து கொண்டு, தான் செய்ததைப் பற்றி மிகவும் நாண முறுவா னாயினன்; மற்று, என் திறத்தை ஆராய்கையில் நான்பெற்ற வெற்றியைக் குறித்து நான் உவப்பதற்கும் இடமில்லாமற் போயிற்று; என்னை? என் நெற்றியைத் தொடுதற்கு விரும்பி விரலை உயர்த்துகையில் அவ்விரல் அவ்விடத்தைத் தப்பி மேலிதழின் மேற் றெற்றுப்பட்டது.அஃதல்லாமலும், என் மூக்கு மிக நீண்டுவிட்ட மையைால் என் முகத்தைத் தடவிப் பார்த்து அதன் வேறு ஒரு பகுதியைத் தொடுகையி ளெல்லாம் இரண்டு மூன்றுமுறை என் கை மூக்கின் மேற் றட்டுப்பட்டு நோயை

என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/81&oldid=1583508" இலிருந்து மீள்விக்கப்பட்டது