உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

57

உண்டாக்கிற்று. இவ்வாறே என்னருகில் நின்ற வேறிரு செல்வர்களும் என்னைப் போலவே ஏளனமான நிலையை யெய்தினராய் நிற்றலுங் கண்டேன். இவர் இருவருந் தங்கட்குள்ள தடித்து வளைந்த இரண்டு கால்களையுங் கெண்டைச் சதையின்றி மெலிந்து தோல்கள் போல் நீண்ட மற்றிரண்டு கால்களையுந் தமது மடமைத் தன்மையால் மாற்றிக்கொண்டு நின்றனர். இவருள் ஒருவன் தன்னியற்கை யுயரம்போய் ஊன்றுகோலைப் பற்றி அதன் மேல் நடப்பவன் போல் மிக உயர்ந்து நீண்டமை யால், அவன் தலை வானத்திலே காற்றிற் சுழல்வதுபோல் தோன்றிற்று; மற்றொருவன் தான் நடக்க முந்துகையில் தன் புதிய கால்கள் வளைந்து வளைந்து சுழன்றமையால் எவ்வாறு நடப்பதென்றே தெரியாமல் வருந்தினான். இவனைப் இ வேண்டுமென்னும் விருப்பம் எனக்கு எழுந்தமையால், என் கையிலிருந்த பிரப்பங் கோலை நிலத்தில் ஊன்றி நேராக ஒரு கோடு இழுத்து ‘இக்கோட்டின் வழியே நேராக நடந்து இக் கோலண்டை கால்மணி நேரத்தில் வருகுவையாயின் இது தருவேன்' என்று, தீவிய கொடி முந்திரிப்பழம் பிழிந்த சாறடைத்த குப்பி ஒன்றை வைத்துக் பகடி பண்ணி மகிழ்ந்தேன்.

பார்த்தலும் பகடி

பண்ண

கடைப்படியாக அவ்விடர்க்குவியல் முழுதும் ஆண்பெண் என்னும் இருபாலர்க்கும் பகுத்திடப் பட்ட பின்னர்த், தத்தமக்குரிய பல்வகைப் பொறையினையுந் தாங்கமாட்டாமற் சுமந்து கொண்டு அங்குமிங்குஞ் செல்வாரான அம் மக்களை நோக்குகையில் அவர் திறம் பெரிதும் இரங்கத்தக்கதாயிருந்தது. அவ்வெளி நிலமெங்கும் முணுமுணுப்பும், முறையீடும், புலம்பலும் அழுகையும் நிரம்பின. இதனைக் கண்ட அறக் கடவுள் அவ்வேழைகள் மீது பெரிதுந் திருவுளம் இரங்கி, அவர் தமக்கு இயற்கையிலே யுரியவற்றை மறுபடியும் ஈந்தருளுதற் பொருட்டு இரண்டாமுறையும் அவர்தம் பொறைகளை யிறக்கி நிலத்தே உய்க்கும்படி கட்டளையிட்ட ருளினார். அருளலும், அவரெல்லாங் கதுமெனப் பேருவகை எய்தி அங்ஙனமே D செய்தனர்; அதன்பிறகு, முன்னே அவர்கள் எல்லார்க்கும் பெரியதொரு மாயங் காட்டி, அவர்களை அதன்கண் விடுத்து ஏமாற்றிய சூர்மகள் அங்கிருந்தவாறே மறைந்தொழியும்படி கட்டளையிடப் பெற்றாள். அவட்கு மாறாக முற்றும் வேறான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/82&oldid=1583509" இலிருந்து மீள்விக்கப்பட்டது