உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் -16

வடிவமுடைய நல்ல ஒரு தெய்வமகள் வருவாளாயினள்; அவளது ஒழுகலாறு நேர்மையும் அமைதியுமுடையதாயிருந் தது. அவளது வடிவம் பொறையும் உள்ளக் களிப்புமுடையதாய் விளங்கிற்று. அவள் சிறிது நேரத்திற்கு ஒருமுறை மான் மருட்டுந் தன் விழிகளால் வான்மேல் நோக்கி, அவ்வறக் கடவுளைப் புல்லிப்பார்த்தனள். அவள் பெயர் பொறுமை எனப்படும். அத் தெய்வமகள் அத் துன்பமலையின் அருகே அணுகி நின்ற வுடனே, அங்கு எனக்கு மிகவும் வியப்பாகக் காணப்பட்டது என்னையோ வெனின், மிகப் பெருத்துயர்ந்த அக் குவியன் முழுதுங் குறுகிச் சுருங்கி முன்னிருந்த பருமனில் மூன்றிலொரு கூறுகூடக் காணப் படுவதின்றாயிற்று. அதன்பின் அவள் ஒவ்வொருவர்க்குந் தக்கவாறு, உரிய துன்பங்களைத் திரும்பக் காடுத்து, அவற்றை எளிதிலே ஏற்றபடி நுகர்ந்தொழிக்கும் நன்முறையினையும் அவர்க்குக் கற்பித்து விடுத்தனள். விடுப்பவே, அவர்கள் தாமே முன்தெரிந் தெடுத்ததனால் தமக்கு வந்து நேர்ந்த இடரில் அகப்படாது, அறிவிற் சான்ற அம் மகளின் சொல்லுறுதி வழிப்பட்டு ஒழுக இசைந்தது பற்றி மிகவுவந்து சென்றனர்.

66

த் தோற்றத்தினின்றும் நன்கு தெளியற் பாலனவாம் நன்னெறித்திறங்கள் பல உளவாயினுஞ், சிறப்பாக இதனால், நான் அறிந்தன; எனக்கு நேருந் துன்பங்களை நுகர்தற்கு அஞ்சி யான் மனக்குறை கொள்ளல் என்றும் ஆகாதென்பதூஉம், பிறர்க்கு உளவாம் இன்பங்களைக் கண்டு மனமழுங்கல் பொருந்தா தென்பதூஉமேயாம்; என்னை? ஒருவன், அயலா னாருவன் எய்துந் துன்பங்களின் இயற்கையை உள்ளவாறு அளந்தறிதல் ஏலாமையானென்க. இந்த ஏதுவினைக் கடைப்பிடித்தே, பிறர் இடும் முறையீடுகளை மிக எளியனவாக நினைப்பது கூடாதென்றும், என்னுரிமை யுடன்பிறப்பினரான மக்கள் எய்துந் துயரங்களைப்பற்றி இரக்கமும் மனவுருக்கமும் உறக் கடவேன் என்றும் உறுதி செய்து கொண்டேன்.”

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/83&oldid=1583510" இலிருந்து மீள்விக்கப்பட்டது