உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

4. மராடன் கண்ட காட்சி

ஆண் பெண் என்னும் இருபாலார்க்கு மட்டுமேயன்றி, விலங்குகளுக்கும் புற்பூண்டுகளுக்கும், உயிரில்லாதன வாகிய மரக்கட்டை கற்களுக்கும், இன்னும் எல்லாத் தோற்றங் களுக்குமே உயிர் உண்டென்று அமெரிக்க தேயத்து மக்கள் நம்பிவருகின்றனர்; கைத்தொழிலாற் செய்யப்படுங் கத்தி,படகு, கண்ணாடி முதலியவற்றிற்கும் அஃது உண்டென்று நம்புகின் றார்கள். இப் பொருள்களில் ஏதேனும் ஒன்று அழியுங் காலத்து, அதன் ஆவியானது, ஆண்பெண்களின் ஆவிகள் இருக்கும் வேறோர் உலகத்திற்குச் செல்லுகின்றதெனவும் நினைக்கின்றனர். இந்த ஏதுப்பற்றியே தங்கள் நண்பர்கள் இறந்தால், அவர்கள் தாம் உயிரோடிருந்த காலத்து மரத்தாற் சமைத்த வில்லுங் கணையு முதலான கருவிகளை இம்மையுலகில் வழங்கியது போலவே, அவர்கள் மறுமையுலகிலும் அவற்றின் ஆவிகளைக் கையாளும் பொருட்டு, அவற்றை எப்போதும் அவர்களது சவத்தின் பக்கத்தே வைப்பர். இத்தகைய கொள்கை எத்துணைப் பொருந்தாதாய்த் தோன்றினும், நந்தேயத்துச் சான்றோர்களும் இவை போல் முழுதும் நம்ப வியலாத பல கொள்கைகளையும் நிலைநாட்டியிருக்கின்றனர்: குறிப்பாய்ச் சங்கரமத வழிப் பட்டவர்கள் மன வுலகத்தைப் பற்றிப் பேசுங்கால் வெறிய எண்ணத்தின் அளவாயுள்ள பொருள்களையும் உயிர்களையும் பற்றியே உரையாடக் காண்கின்றா மன்றோ? பாற்கரிய மதவாதி களுட் பல்லோரும் இங்ஙனமே தாங் கூறும் பொருள்களை விளங்கா வகையாய் விரித்துப் பேசுகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஓர் அறிஞர் காந்தக் கல்லைப்பற்றித் தாம் விரித்தெழுதிய ஓர் உரையில் அக் கல்லின் இழுக்கும் ஆற்ற லானது தீயின் சேர்க்கையால் அழிந்து போம் என்பதனை நிலை நிறுத்துவான் புகுந்து, அவர் தாம் ஒருநாள் கொழுந்து விட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/84&oldid=1583511" இலிருந்து மீள்விக்கப்பட்டது