உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

❖ LDM MLDMOшLD -16 →

டெரிந்த நிலக்கரித் தொகுதியினிடையில் ஒரு காந்தக்கல்லை இடுவித்து உன்னிப்பாய் நோக்குகையில் அதிலிருந்து நீலவண்ண மான ஒரு புகை திரண்டு மேல் எழும்புவதைப் பார்த்து, அப்புகையே அக்கல்லின் உண்மை வடிவ மாகுமென நம்பி உரை கூறினார்; அவர் அவ்வாறு கூறிய அக்கல்லின் புகைவடிவே அதன் உயிராகும் என்பதூஉம் அவரது

கருத்தாயிற்றென்க.

னி, ஆவிவடிவங்கள் தொகுதி தொகுதியாயிருக்கும் ஓரிடத்திற்கு -அதாவது மறுமை யுலக மென்று இங்குள்ள நாம் வழங்குகிற அவ்விடத்திற்குத் தங்கள் தேயத்தான் ஒருவன் கனாவிற்போய் வந்தனனாக அமெரிக்கர் தமக்குள் ஒரு கதை வழங்கி வருகின்றது. அவன் அங்ஙனம் போய் மீண்ட பின்னர், இறந்தோர் உறையும் அவ்விடத்தில் தான் கண்டன முற்றுந் தற்றென விளங்கத் தன் நண்பர்கட்கு எடுத்துக்கூறினன். இதனைப் பற்றிப் பழமை தொட்டு அவர்கள் தமக்குள் எவ்வகையான வரலாறு வழங்கி வருகிறார்க ளென்பதைக், கூடுமாயின், உசாவித் தெரிந்துகொள்ளும்படி அவ்வமெரிக்க தேயத்து மன்னர்கள்பால் மொழிபெயர்ப் பாளனாயிருக்கும் ஒருவனை என் நண்பன் ஒருவன் ஏவினான். அவன் அவர்களைப் பலமுறையும் உசாவிய பலவகை வினாக்களால் தெரிந்து கொண்ட அளவு அது பின்வருமாறு எழுதப் படலாயிற்று:-

அக்காட்சியைக் கண்டு மீண்ட மராடன் என்பான் ஒருவன் குடைவாக இருக்கும் ஒரு மலையடிவாரத்தில் நெடுவழி நடந்து சென்றபின் ஆவிவடிவங்கள் தங்கும் உலகத்தின் எல்லையிற் கடைசியாக வந்து சேர்ந்தான்; அவ் வெல்லையிற் குறுஞ் செடிகளும், முட்செடிகளுங் கூரிய முட்களும் ஒன்றோ டொன்று சன்னல் பின்னலாகப் பிணைந்ததோர் அடர்ந்த காடு இருந்தமையால் அதனிடையே வழிகண்டு நுழைவது கூடாதா யிற்று. அவன் அக்காட்டின் எப்பக்கத்திலாவது சுவடுபட்ட ஒற்றடிப் பட்டம் ஏதேனும் உண்டாவென உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் ஒரு பக்கத்தில் தனக்குரிய இரை யைத் தேடி அதனைப் பதுங்கிப் பார்க்குமாறு போலவே தன்மேல் விழிவைத்துப் படுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒருபெருங் கோளரியைக் கண்டான்; காண்டலுந், திடுக்கிட்டுப் பின்றங்கினான்; அவ்வரிமாவும் உடனே துள்ளி எழுந்து அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/85&oldid=1583512" இலிருந்து மீள்விக்கப்பட்டது