உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள்

61

மேற் பாய்ந்தது. அப்போழ்து தன்னிடத்து ஏதொரு படைக் கலமும் இல்லாமையால், கீழ்க்கிடந்த ஒரு பெருங்கல்லைத் தன்கையிலெடுப்பதற்குக்குனிந்தான்; குனிந்து பற்றுகையில் அஃதவன் கையிற் பற்றப்படாது போகவே அவன் பெரிதும் வியப்புற்று, அஃது ஒரு கல்லின் வெறுந்தோற்றமே என்று கண்டான். இங்ஙனம் இதில் இவன் ஏமாந்து போனாலும், மற்ற வகையில் மிக மகிழ்வதானான்; அவன்றன் இடது தோளை வந்து பற்றிய அவ் வரிமா அதனைப் புண்படுத்த மாட்டா தாயிற்று; அஃது அக்கொலைவிலங்கின் பேயுருத் தோற்ற மென்றே அவன் கண்டு கொண்டான். வலி விழந்த அப்பகை விலங்கினின்றுந் தப்பி அவன் அக்காட்டண்டை போய் அதனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தபின், மற்றைப் பக்கத்தைக் காட்டிலும் அலைசலாயிருந்த ஒரு பாகத்தின் வழியாய்த் தள்ளி உள் நுழைவதற்கு முன்னினான். முன்னித் தள்ளலும் அப் புதல்கள் அவன்கையி லகப்படாது வறியவாயிருந்த மையாற், பின்னும் மிக வியப்படைந்து, திறந்தவெளியில் நடப்பதுபோல் அத்துணை எளிதாக முட்களிடையிலும் முட்செடிகளிடையிலும் நடந்துசென்றான். சுருங்கச் சொல்லுங் கால், அக்காடு முழுவதூஉங் காட்டின் வெறுந் தோற்றமே யன்றிப் பிறிதில்லை என்க. ஆகவே, முட்செடிகளும் முள்ளும் பம்பிய இந்தப் பெருங்குறுங்காடு அகத்தே தங்கும் ஆவிகளுக்கு ஓர் அரணாய்க் கோலிய பச்சை மரவேலியே யாகுமென்றும், இம்முட்செடி களும் முள்ளின் கூரிய முனைகளும் ஊனுங் குருதியும் நிரம்பிய வுடம்பைக் கிழிக்கும் வலியிலவாயினும், மிக நுண்ணிய ஆவியின் உடம்புகளைக் கீற வல்லனவேயா மென்றும் அவன் உடனே முடிவு செய்தான். இவ்வகையான நினைவோடும் இந்தச் சிக்கலான காட்டின் ஊடே புகுந்து போவதற்குத் தீர்மானஞ் சய்து, து, இவன் உள்ளே செல்லச் செல்லத் தீவிய மணங்கமழுந் தென்றற்காற்றும் வரவர மிகுதி யாயும் இனிதாயுந் தன்மேல் வந்து வீசுதலை உணர்ந்தான். இவ்வாறு சிறிது வழி நடந்து போவதற்குள் முட்களும் முட்செடிகளும் வளர்ந்த இடம் முடிந்துபோக, நறுமணங் கமழ்வனவும் நிறஞ்சிறந்தனவுமாகிய மலர்களால் மூடப்பட்ட ஆயிரக்கணக்கான பசியமரங்கள் அழகுவாய்ந்து நிற்றலினால் இனியன பலவும் நிரம்பிய காடாய்த்தோன்றும் பிறிது ஓரிடந், தான் முன் கடந்து போந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/86&oldid=1583513" இலிருந்து மீள்விக்கப்பட்டது