உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சிந்தனைக் கட்டுரைகள் *

63

இக்காட்சியைக் கண்டு செல்கையில், மிகப் பல வகையான நிற வேறுபாட் டோடுஞ் செழிப்புற்றுத் தன்னைச் சுற்றி எங்கும் வளர்ந்து எழுந்துநிற்கும் நறுமலர்களில் பெரும்பாலன, தன் நாட்டிலுந் தான் எஞ்ஞான்றும் பாராதனவாயிருந்தமையால், அவற்றைப் பறிப்பதற்குத் தான் பலமுறையும் அவாவினான். ஆனாலோ, அவை காட்சிப் புலனாம் பொருள்களே யல்லாமல் தொட்டறி தற்கு இயலா வெறுந் தோற்றமேயெனச் சிறிது நேரத்துள் தெரிந்து கொண்டான். கடைசியாக அவன் ஒரு பெரிய யாற்றங் கரைப் பக்கத்தில் வந்து, தானே மீன்பிடித்தற்

றொழிலில் வல்லவனாதலால், அங்கே தூண்டிற்கார னொருவன் பலதிறப்பட்ட பல அளவான மீன்களைப் பிடித்து அவை அவனருகே மேலுங் கீழுமாய்த் துள்ளிக் கொண்டிருத்தலைப் பார்க்கும் பொருட்டுக் கரைமேற்

சிறிதுநேரம் நின்றான்.

மராடன் என்னும் இந்த அமெரிக்கன் தன் றேயத்திலுள்ள மகளிரிற் பேரழகாற் சிறந்த ஒரு மங்கையை முன்னே மணந்தா னென்பதும், அளவாற் பல பிள்ளைகளைப் பெற்றானென்பதும் யான் முன்னமே குறித்திருக்கவேண்டும். இவ் விருவரும் மாறாக் காதற் கிழமையோடும், ஒருவர் ஒருவர்பாற் றிண்ணிதாகப் பிணிக்கப்பட்ட உள்ளத்தோடும் புகழ்பெற வாழ்ந்தமை பற்றி, அவன் தேயத்தார் வதுவை யயரும் மணமகன் மணமகளை வாழ்த்துங்கால், "மராடனும் அறாத்தில்லையும்போல் ஒருமித்து வாழக்கடவீர்கள்” என்று இன்றுகாறும் வாழ்த் துரை பகர்வது வழக்கம். மராடன் மேற்கூறியவாறு அச்செம்ப டவன் பக்கத்திற் சிறிது நேரந்தான் நின்றிருப்பன்; தன் மாறாக்காதலி அறாத்தில்லையி னுருவைக்கண்டு, அவளை அவன் இன்ன ளென்று தெரிந்து கொள்ளுதற்கு முன், அவன் மேல் அவள் தன் கண்ணைச் சிறிதுநேரம் பதிய வைத்துப் பார்த்தனள்; உடனே அவள் கைகள் அவனைத் தழுவுதற்கு நீண்டன. அவள் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகிவழிந்தது, அவள் பார்வையும் அவள் கைகளும் அவள் குரலும் அவனைத் தன்மாட்டு அழைத்தன; அவ்வியாறு கடக்கலாகா அருமைத் தென்று அதே நேரத்தில் தெரிப்பனவும் போன்றன. தன் அன்பிற்குரிய அறாத்தில்லையைக் கண்ட வளவானே அவ் வமெரிக்க னுள்ளத்தி லெழுந்த களிப்பு, துயர், காதல், விருப்பு, வியப்பு

அவ்வளவில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/88&oldid=1583515" இலிருந்து மீள்விக்கப்பட்டது