உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

85

யினையும் அவரது வாழ்க்கையின் இயல்புகளையும் அமைதியாக ஆராய்ந்து பார்ப்பவர்க்கல்லாமல் மற்றவர்க்கு ஒருசிறிதும் விளங்கமாட்டாது. தமிழ்மக்கள் பண்டு தொட்டே நாகரிகத்திற் சிறந்தவரா யிருந்ததனால் அவரொடு பல மொழிபேசும் பல நாட்டவருங் கலந்து பழகவே மற்ற மொழிகளின் சொற்களிற் சில தமிழிலுங் காணப்படுவ ஆயின. இங்ஙனங் காணப்படுதல் தமிழ் மொழியின் நாகரிகச் சிறப்பினையும் அதன் வளர்ப்பத் தினையுங் காட்டுகின்றதே யல்லாமல், அதற்கு அது தாழ்வாதலைக் குறிக்கின்றதில்லை. உண்மை இவ்வாறிருப்ப, இதனைச் சிறிதும உணர மாட்டாமல் சுவாமிநாத தேசிகர் என்பார் தாம் இயற்றிய இலக்கணக் கொத்தில், “அன்றியுந் தமிழ் நூற்களவிலை அவற்றுள் ஒன்றே யாயினுந் தனித் தமிழுண்டோ” எனக் கூறியது வெற்றாரவார வுரையாமன்றிப் பிறிதென்னை?

மேலும், நெடுங்காலம் உயிரோடிருந்து திகழும் ஒரு மொழியிற் பிற சொற்கள் கலத்தல் போலச், சின்னாள் உயிரோடிருந்து பின்னர் இறந்துபடும் ஒரு மொழியிற் பிறசொற்கள் மிக நுழைந்து நிலைபெறுதற்கு இடமேயில்லை. தனாலேதான், ஆரிய மொழியிற் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகச் சேர்ந்து காணப்படவில்லை. ஆரியம் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே எவரானும் பேசப்படாமல் இறந்து பட்டமையின், அதன் கட்பிறசொற்கள் புகுதற்கு வழியில்லாமற் போயிற்று. இதுகொண்டு ஆரியமொழி உலக வழக்கிற்குப் பயன்படாமையோடு அது நாகரிக வளர்ச்சிக்கு இசைந்த தாகாமையும் நன்கு பெறப்படும். ஒருவர் ஒருமொழி பேசுகின்ற வராய் இருந்தால்மட்டும் அவர் மற்றமொழிச் சொற்களை எடுத்தாள நேருமல்லது, அவர் ஏதுமே பேசாத ஊமையா யிருந்தால் அவர் பிறவற்றை எடுத்தாளச் சிறிதும் இடமுண்டாக மாட்டாது. ஆதலால், உலக வழக்கிலின்றி இறந்துபட்ட ஆரியமொழி பிற மொழிச் சொற்களை ஏற்கவும் மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படவும் மாட்டாதாயிற்றென்க.

இனி, உலக வழக்கின்கண் வழக்கின்கண் உள்ள ஒரு ஒரு மொழியிற் பிறசொற்கள் வந்து சேருமாயின், அஃது இயற்கையாக நிகழவேண்டுமே யல்லாமற் கல்வியறிவுடைய சிலரால் அவர் தமக்குத் தோன்றியபடி யெல்லாம் அவை செயற்கையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/110&oldid=1584316" இலிருந்து மீள்விக்கப்பட்டது