உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

13. தமிழின் தனிச் சிறப்பு!

.

லக மொழிகள்

இந்தக் தலைப்பின் கீழ் மற்ற மொழிகளைவிடத் தமிழுக்கு மட்டுமுள்ள தனிச் சிறப்பியல்புகளை எடுத்துக் காட்ட வேண்டுமென்பதே என் ஆசை. உலகத்திலே பேசப்படும் மொழி ஒன்று குறைய ஆயிரம் என்று சொல்லுகிறார்கள். James என்ற ஆங்கில ஆசிரியர், 999 மொழிகள் மக்களால் பேசப்படுகின்றன என்று சொல்லுகிறார். இவற்றிலே எழுதவும் பேசவும் உள்ள மொழிகள் மிகவும் குறைவு. பேச்சளவிலே உள்ள மொழிகள் தான் மிகவும் அதிகம்.

999 மொழிகளிலேயும், பண்படுத்தப்பட்டு இலக்கிய முடையதாய் மக்களைச் சீர்திருத்தும் நிலையிலுள்ள மொழிகள், ஏறக்குறைய பத்துப் பதினைந்து மொழிகளாகும். மக்கள் தோன்றிய காலம் தொட்டு இதுவரையில் எவ்வளவு நாகரிக வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது? என்பதை Jeep என்ற ஆசிரியர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். Jeep என்ற ஆசிரியர் நிலவுலகம் தோன்றி நூறாயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன என்கிறார். முன்னர், மக்கள், புல் புல் பூண்டுகள் உள்ள இடங்களிலே அளவுக்கு மிஞ்சி வாழ்ந்திருந்தார்கள்.

மொழியின் தோற்ம்

மக்கள் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகள் வரை பேசத் தெரியாது; எழுதத் தெரியாது; படிக்கத் தெரியாது; உடை உடுத்தவும் தெரியாது; உண்ணத் தெரியும்! ஆணும் பெண்ணுமாய் மருவத் தெரியும்!! அவ்வளவுதான்.

ஆண்டு முதிர முதிர அறிவு வளர்ந்து பேசக் கற்றுக் கொண்டதோடு பின்னர் எழுதவும் கற்றுக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/130&oldid=1584342" இலிருந்து மீள்விக்கப்பட்டது