உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் -17

எழுதவும் பேசவும் தோன்றிய பின்னர், பாட்டுகள் பாடினார்கள். அவர்கள், முதல் முதல், கருத்தை அறிவிக்க ஓவியம் எழுதக் கற்றுக் கொண்டார்கள். எதற்காக ஓவியம் எழுதக் கற்றுக் கொண்டார்கள்? முதல் முதல் தாங்கள் உணவாகக் கொள்ளும் விலங்குகளை ஓவியமாக எழுதி வந்தார்கள். அதுவும் ஓவியம் மூலமாக எழுதப்பட்ட விலங்குகளை எளிதிலே அறிந்து பிடிக்கமுடியும் என்பதற் காகவேயாம்.

|

பிறகு, வேட்டுவ வாழ்க்கையிலே இருந்த மக்கள், அம்பினாலே எய்து விலங்குகளைப் பிடிப்பதற்காக எழுத்தின் வாயிலாக விலங்குகளைப்பற்றி எழுதியே விளக்கினார்கள்.

66

எண்ணத்தை நிறைவேற்றினால் நினைவிலே எண்ண மானது வரும். இதற்கே Phychography என்று சொல்லுகிறார்கள். து உருவேற்ற உருவேற்ற அவ்வெண்ணமானது நிறைவேறுகிறது. தாலைவிலுணர்தல்” என்ற நூலிலே இதுபற்றி ந நன்கு விளக்கியிருக்கிறேன். நாம் நினைக்கின்ற நினைப்பை எண்ணிக் கொண்டே யிருப்போமானால் கட்டாயம் கைகூடுகிறது. ஆராய்ச்சியில் வல்ல பிற ஆசிரியர்கள் இந்த உண்மையை நன்கு புலப்படுத்தி யிருப்பதைப் படித்தால் தெரியும். உண்மை யிலேயே, ஆராய்ச்சி செய்தால் மறைந்த நுண்ணிய பொருள்கள் தெரியும். பலகாலங்களிலே, பல இடங்களிலே, என்னுடைய பழக்க வழக்கங்களைக் கொண்டு நான் முயற்சி செய்த காலத்தும் மறைபொருள் நிகழ்ச்சிகள் காணப்

பட்டிருக்கின்றன.

“White and Black Magic” பற்றி Haddon என்ற ஆசிரியர் எழுதியிருக்கிறார். இப்போது நிகழ்ந்த பெரும் போரினாலும் 20, 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் போராலும், பல சிறிய சண்டைகளாலும் இப்படிப் பட்ட உயர்ந்த கலை களெல்லாம் நிலைகலங்கிப் பாழாய்ப் போய்விட்டன.பல நூல் நிலையங்கள் மறைந்துவிட்டன. என்ன காரணத்தினாலோ பெரும்போர் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. ஏன், பெரும் போர்கள் நிகழ்கின்றன? இதற்கு நுட்பமான காரணம் உண்டு. அதாவது எண்ணமானது நமக்கு எப்படி ஓடுகிறது? தன்னலம்! “தானே உண்டு பிறருக்குக் கொடுக்கக் கூடாது” என்கிறபோது போர் போர் உண்ட உண்டாகிறது. ாகிறது. தான் உண்ணும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/131&oldid=1584343" இலிருந்து மீள்விக்கப்பட்டது