உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

107

ணவைப் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்கிறபோது போரில்லை; சண்டையில்லை; சச்சரவில்லை. இந்த எண்ணமானது பலருக்குத் தோன்றுவதில்லை. பலரிடம் இந்த எண்ணம் இடம் பெறாத தால்தான் போர் உண்டாகிறது.

முதன் முதல் ஓர் ஆணும் பெண்ணும் கூடிய

கூட்டத்தினின்று ஆணோ, பெண்ணோ பிறந்தது. தனக்கு என்ற முனைப்போடு நில்லாமல் பெண் ஆணுக்குத் துணையாக நின்றாள். ஆண் பெண்ணுக்குத் துணையாக நின்றான். உண்மையிலேயே சேர்க்கையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வாழ்க்கைத் துணை ஏற்பட்டது.

6

வாழ்க்கைத் துணையானது பிறருக்கும் உதவி புரியப் பயன்படுகிறது. வாழ்க்கையாறு ஒன்று, இரண்டு பேராறாகி, பிள்ளைகள் மூன்று-நான்காகப் பெருகலாயிற்று.பின்னர், ஒரு குழாங் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை ஏற்பட்டது. ஓர் அவா, ஓர் இன்றியமையாமை, எண்ணிய எண்ணம் இவற்றை அறிவிப்பதற்குக் கண்ணினாலேதான் குறிப்பைக் காட்டினார்கள்! வாயினாலே ஒலியை உண்டாக்கினார்கள்! கையினாலே சைகை காட்டினார்கள்!

எந்த வகையினால் எண்ணத்தை அறிவிக்க இயலுமோ அந்த வகையிலெல்லாம் எண்ணத்தை வெளியிட்டுவந்தார்கள். மக்கள் அந்தக் காலத்திலே இயற்கையைப் பார்த்தார்கள். உயிர்களின் மூலம் ஒலியை உண்டாக்கினார்கள். கையினாலே- காலினாலே கடைசியாகச் சைகைகள் காட்டி வந்தார்கள். முதன் முதலில் ஒருவர் மற்றொருவருக்கு ஒலி வழியாக, ஓசை வழியாகப், புலப்படுத்தி வந்தனர். விலங்கினங்களும் அப்படியே செய்து வந்தன. முதன் முதலில் மக்களுக்கும், விலங்கினங் களுக்கும் வேறு பாடுகளே இல்லை!

.

உணவு உறக்கம் இவற்றில் முதன் முதலில் விலங்கினங் களைப் போலவே மக்களும் இருந்தார்கள். விலங்கினங்கள் உணவு உண்டன. மக்களும் உணவு உண்டார்கள். மக்களிலே ஆணும் பெண்ணும் மருவினர். விலங்கினங்களிலும் ஆணும் பெண்ணும் மருவின. விலங்கினங்களும் குட்டிகளை ஈன்றன. மக்களும் மக்களை ஈன்றனர். மக்களினமும் விலங்கினமும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் வேற்றுமை யில்லாமல் வாழ்ந்து வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/132&oldid=1584344" இலிருந்து மீள்விக்கப்பட்டது