உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் -17

66

அப்பர் இறைவனைப் பார்த்து ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே!” என்று பாடியிருக்கிறார். இறைவன் ஒலி வடிவம் என்று நாம் சொல்லுகிறோம்., ஆசிரியர் இதனை 'சப்தப்ரம்மவாதம்' என்று சொல்கிறார்கள். மக்கள் பழைய காலத்திலே அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே பேசுவதற்கு முற்பட்டதாக நூல் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

முதன் முதலில் எண்ணங்களை ஒலி வகையிலே எழுத்து வகையிலே அறிவித்து வந்தார்கள். மக்கள், வாழ்க்கையைத் திருத்தமாக நடத்த முற்பட்டார்கள். சுவரிலே ஓவியங்களை எழுதி எண்ணத்தைப் புலப்படுத்தியும் வந்தார்கள். “மக்கள் முதன் முதலில் எழுதத்தான் எண்ணினார்கள்” என்று H.G. வெல்ஸ் சொல்லுகிறார். பழங்கால மக்கள் வாழ்ந்த மலைகளில் உள்ள குகைகளில்புகுந்து பார்த்தால் உருவங்கள் தென்படு கின்றன. மானின் உருவம் - பறவையின் உருவம் - யானை உருவம் இப்படிப் பல உருவங்கள் வரையப்பட்டிருக்கின்றன. பழங்கால மக்களுக்கு முதலில் எழுதத் தெரிந்ததே யல்லாமல் பேசத் தெரியவில்லை. முதலில்ஓசை வடிவாகவும் பின்னர் எழுத்தின் வாயிலாகவும், பின் ஓவியத்தின் வாயிலாகவும் எண்ணிய எண்ணங்களை வகைப்படுத்தி ஒருவர்க்கு ஒருவர் அறிவித்து வந்தார்கள். முதலிலே அவர்கள் ஓவியங்களை எழுதக் கற்றுக் கொண்டது மிகவும் வியக்கத் தக்கதாக இருக்கிறது. எகிப்து (Egypt) என்ற பெரிய பட்டணத்திலே பழங்கால ஓவியங்கள் பல முறையிலே பலவிதமாகக் காணப்படுகின்றன.

6

.

இசை-தமிழ்ச் சொல். ராகம்-வடமொழிச் சொல். ராகம் என்றால்தான் பெரும்பாலான மக்களுக்குத் தெரிகிறது, ஆதலால் ராகம் என்று சொல்லித்தான் இசையைப் பற்றி விளக்கவேண்டிய வெட்கக்கேடான நிலை தமிழர்களுக்கு உண்டாகியிருக்கிறது.

உணர்ச்சி

மக்களுக்கு மகிழ்ச்சி வந்த காலத்திலே வசப்பட்டுப் பாடுதலைக் (Emotional Language) கற்றிருந்தனர். மிகுந்த மகிழ்ச்சி அளிப்பது பின்னர்த் துன்பமாக மாறும் பொழுதுதான் (Emotional Language) உணர்ச்சி வசப்பட்டுப் பாடுதல் உண்டாகிறது. பெண்பாலார் மனதைக் கரைக்க “ஒப்பாரி” வைத்துப் பாடுவார்கள். ஒப்பாரியானது மனதை

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/133&oldid=1584347" இலிருந்து மீள்விக்கப்பட்டது