உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

109

மன அசைவானது

-

அப்படியே உருக்கி விடுகின்றது. அழுகையின் மூலம் வெளிப் படுத்தப்படுகிறது. (அழுகையின் மூலம் வெளிப்படுத்துவதனால் ஒரு விதத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.) பாடலின் மூலம் இன்பத்தை - துன்பத்தை அழுகையை அந்நாளில் புலப்படுத்தினார்கள். இந்த ஓசை, வடிவிற்கு வந்த பிறகு, எவரும் சையைக் கலவாமல் பாடுவதில்லை. இயலோடு கூடவே இசையையும் ஒருங்கு சேர்த்த - அதாவது இயல்-இசை ஒருங்கு நடைபெற்ற காலம் தான் மிக உயர்ந்த காலம். சிலப்பதிகாரம் என்னும் காவியம், பாட்டின் சிறப்பை அறிந்துதான் பாடப்பட்டது.

இயற் சொற்களோடு இசையையும் கூட்டி ஒருவரைப் பார்த்து மற்றொருவர் அழும்பொழுது நமக்கு அழுகையும், ஒருவரைப் பார்த்து மற்றொருவர் நகைக்கும் பொழுது நமக்கு நகைப்பும் உண்டாகின்றன. இயற் சொற்களோடு இசையையும் சேர்த்துப் பேசும்பொழுது நமக்கு மன அமைதி உண்டாகிறது. மெய்ப்பாடுகளையெல்லாம், மன நிலைகளை யெல்லாம் ஓசைகள் மூலம் புலப்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். முதல் ஒலி – “ஓம்”

66

முதன் முதலில் ஓசையிலிருந்து தான் மொழிபிறந்தது. மக்கள், ஓசையை உண்டாக்காத காலத்தில் இயற்கையாகவே ஓசை உண்டாயிற்று. முதன் முதலில் ஏற்பட்ட ஓசை ஓம்' என்பதாகும். கடலோசையைப் பாருங்கள், "ஓம்" என்று கேட்கும். சங்கை ஊதிப் பார்த்துக் காதில் வைத்துப் பாருங்கள். அமைதியாகக் கடலோசையும் சங்கோசையும் கேட்டால், “ஓம் என்ற ஓங்கார ஓசை நன்கு புலப்படும். உள் நோக்கிப் பார்த் தாலும் இந்த ‘ஓம்’ ஓசை நன்கு புலனாகும். மக்கள் இல்லாத காலத்திலிருந்து இயற்கையினிடம் ஓசை இருந்ததோடு இப்போதும் அந்த ‘ஓம்' என்ற ஓசை இயற்கையினிடம் யற்கையாய் இருந்து இருந்து வருகிறது. இதை ப்போதும்

பார்க்கலாம்.

'ஓம்' என்ற இந்த ஓசையிலே நாம் அறிந்து கொள்ளக் கூடிய பொருள் விளங்கவில்லை. அந்தக் காலத்தில் ஒருவர் கருத்து மற்றொருவருக்கு ஒத்திருந்தால் முதலில் ‘ஓம்' என்றும், பிறகு “ஆம்” என்றும் சொல்லி வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/134&oldid=1584348" இலிருந்து மீள்விக்கப்பட்டது