உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் 17

அகரத்துக்குத்தான் வாயைத் திறந்து

வேண்டும்.

66

'அகர முதல வெழுத்தெல்லாம் மாதி

பகவன் முதற்றே யுலகு

சொல்ல

என்று ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் சொன்னார். “அ” என்று பிறக்கிறதும், “ஆ” என்று அழுகிறதும், “ஓம்” என்ற ஓசையிலேயே ஆரம்பிக்கிறது. எல்லாவற்றையும் உள்ளடக்கி முதலாய் நிற்பது “ஓம்” என்ற முதல் ஓசையே. ஓம் என்ற ஓசையை ஓங்காரம் என்றும் பிரணவம் என்றும் சொல்லுவார்கள்.

‘ஓம்’ - தமிழ்ச் சொல்

உலகம் ‘ஓம்' என்ற ஓசையிலிருந்துதான் பிறந்தது. இந்த 'ஓம்' என்ற ஓசையானது தமிழுக்கு மிகவும் சிறப்புடையது. நீக்ரோக்களும் இந்த ‘ஓம்' ஓசையைப் புகழ்ந்து பேசுகிறார்கள். தமிழ் மொழியானது ‘ஓம்' என்ற ஓசை ஒலியால் தனிச் சிறப்புடையது. “ஓம்' என்ற ஓசையை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர்.

'ஓம்' தமிழுக்காகவே எழுதப்பட்டது. 'ஓம்' என்ற சொல் ஓங்கார வடிவிலே எழுதப்படுகிறது. ஆரிய மொழியிலுங்கூட தமிழ் வடிவிலேயே ‘ஓம்' என்ற சொல் எழுதப்படுகிறது. 'ஓம்' என்ற ஓசை முதல் முதலில்ஏற்பட்டதற்கும் அந்த ஓங்கார வடிவில் “ஓம்" அமைந்திருப்பதற்கும் என்ன காரணமென்று மக்களில் பலரிடம் உசாவியிருக்கின்றேன். இதுவரையிலே யாரும் தகுதியான விடை சொல்லவில்லை.

நாளாக நாளாக எனக்கு ஒரு கருத்துப் புலனாயிற்று. அதாவது, நம்முடைய காதின் வடிவத்தைப் பார்த்தால் ஓங்கார வடிவாகவே இருக்கும். பொருத்தமாயிருந்தால் என் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

கூட்டொலி என்றும், பிரிவொலி என்றும் தமிழில் இருவகை உண்டு. இதனைச் சமஷ்டி என்றும், வியஷ்டி என்றும் வடமொழியில் சொல்வதுண்டு.

கூட்டொலி - 'ஓம்'; பிரிவொலி - அ, உ, ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/135&oldid=1584349" இலிருந்து மீள்விக்கப்பட்டது