உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கணம்

  • அறிவுரைக்கொத்து

111

எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லால், பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி தெரிந்தவர்கள் தமிழர்களே. Dr. Brain என்ற ஆசிரியர் இதைஒப்புக்கொண்டு குறிப்பிட் டிருக்கிறார்.

ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன் முதலில் இலக்கியம் இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது.

தொல்காப்பியம்

5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. அகரத்தைப்பற்றித் தொல்காப்பிய ஆசிரியர் முறைப்படி காட்டியிருக்கிறார். ஓசையை அறிந்ததும் அதனை எழுத்து வடிவிலே கொணர்ந்து நெடுங்கணக்கிட்ட பெருமை தமிழர்களுக்கே உரியது; வேறு எவர்க்கும் உரிய தன்று.

-

6 எழுத்துக்களை ஒலியெழுத்தென்றும் வரியெழுத் தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே. தொல்காப்பியம் என்னும் அரிய நூல் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிரா விட்டால் இவைகளையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்கு வழி இல்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று தமிழர்கள் இலக்கணத்தை 5 பகுதிகளாக வகுத்துள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அகத்திணை புறத்திணை என்பது பற்றித் தொல்காப்பியனார் விளக்கினார். தொல்காப்பியரிடம் எவ்விதக் குறைபாடும் இல்லை.

-

எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிற அறிஞர்கள் பழங்காலத்திலே இருந்தார்கள். இப்பொழுது நம் நாட்டில் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள் குறைவு. அறிஞர்கள் எல்லாரும் தொல்காப்பியர் கருத்தை ஒத்துக் கொள்வார்கள். தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ் நாட்டிலே அதிகம். து தமிழர்களுக்கு ஒரு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, கருவூலம் இருக்க, பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர்கள் இருப்பது பெரிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/136&oldid=1584350" இலிருந்து மீள்விக்கப்பட்டது