உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் 17

வருந்துதற்குரியது. தொல்காப்பியரைப்பற்றி இங்குப் பேச வேண்டுமென்கிற ஆர்வம் எனக்குண்டு.

6

6

6

பயிர் நூலைப்பற்றியும் (Botany), உயிர் வகைகளைப் பற்றியும் (zoology) தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். எந்தப் பயிர் எந்த நிலத்தில் வளரும்? எந்தப் பறவைகள் எந்த நிலத்தில் வாழும்? எந்தநிலத்தில் மக்கள் தொழில் செய்யலாம்? எது நாகரிகம் என்பதுபற்றியெல்லாம் தொல்காப்பியர் சொல்லி யிருக்கிறார். உலகத்திலே கண்டறியப்படுகின்ற (Geology) பற்றியும் தொல்காப்பியத்திலே காணலாம்.

ஒன்றை நூறாக, நூறை ஆயிரமாக, ஆயிரத்தைப் பதினாயிரமாகச் செய்ய வேண்டும். அப்படி நாம் செய்தோமா? தொல்காப்பியருக்குப் பின் யாராகிலும் அப்படி வளர்த்தார்களா? இல்லையே! தொல்காப்பியத்தை நாம் எடுத்துப் பார்ப்போமானால் மொழியிலே ஓசை மிகைப்படும் எண்ணத்தை வழிப்படுத்தியிருக்கும் தமிழ்ச் சொற்களைக் காணலாம்.

தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் இயல்

உண்டி

உணவை

சவ்வையாக

66 உண் டி முதற்றே உணவின் பிண்டம்”. உயிர் எதை முதலில் வேண்டுமென்கிறது? முதன்மையாக உயிர் வேண்டுகிறது. உணவு இல்லாதபோது உயிரை வளர்ப்பது கடினமாயிருக்கிறது. நார்த்தஸ் என்ற ஆசிரியர் Population என்ற நூலிலே இதனை நன்கு விளக்கியிருக்கிறார். உலகத்திலே உயிர் வாழ்க்கைக்காக, உடம்பின் வாழ்க்கைக்காக வேண்டியது உணவுதான். உணவின் பிண்டமாகிய நம் உடல் உணவினாலேதான் வளர்கிறது. உணவினால்தான் உலகில் போர் நடைபெறுகிறது. மற்றவர் களின் உணவைப்பற்றிக் கவலைப்படாமல் உணவு எனக்குத்தான் வேண்டும் என்று சொல்வதால்தான் போர் மூளுகிறது அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/137&oldid=1584352" இலிருந்து மீள்விக்கப்பட்டது