உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • அறிவுரைக்கொத்து

“தன்னது என்று சாற்றுவான்"

113

என்று தாயுமான அடிகளார் சொல்லுகிறார். ஆகவே, கடவுளே உன்னை நான் எப்படி வேண்டுவேன்? உயிர் இல்லாதபோது உயிர் அளித்தாய்.பிறவியிலே தாழ்ந்த எண்ணமுடைய நான் கேட்கவே தெரியாத காலத்தில் எனக்குப் பால் கொடுத்தாய். உணவுப் பிண்டம் அளித்தாய்; ஆனபடியினாலே நீ உனக்கென்று எதையும் வைத்திராமல் எனக்குத் தருகிறாய். உலகத்திலே உள்ள உன்னுடைய பொருளுக்கு, என்னுடையது அவனுடையது என்று மக்கள் போரிடுகிறார்கள்.

யார் எதைக் கேட்கிறார்களோ, அதை ஈசன் தருகிறார். "வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட' என்ற அடியைத் திருமுருகாற்றுப்படையிலே காணலாம். இறைவன் ன்பமே வடிவாக, அன்பே வடிவாக, அறிவே வடிவாக இருக்கிறார். அறிவும் அன்பும் இன்பமும் பெற, யார் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் அதனைத்

தருகிறார்.

66

ன்

த்தனை பாருள்களையும் அமைப்புகளையும் இறைவனை வேண்டினால் கிடைக்கிறது. கிடைத்தவுடன் என்னது “என்னது” என்று சொல்லிப் பெரும் பிழை செய்யலாமா? இறைவற்குரிய பொருளை இறைவனுடையது என்று சொல்லிப் பிறருக்கு வழங்காதிருப்பது பெரும் பிழையல்லவா?

கோடிக்கணக்கான பொருள்களை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்களில் இரண்டு மூன்று பேர் எனக்கு மிகவும் வேண்டியவர்கள். கோடிக்கணக்கான பொருள் வைத்திருந்தும் எவ்வளவோ பேர் மடியவில்லையா? "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே என்று பட்டினத்தாரும் பாடியுள்ளார்.

.

கோயம்புத்தூரிலே என் நண்பர் ஒருவர் கோடிக் கணக்கான பொ பாருள்களை வைத்திருந்தார். அவர், காரில்மோதிக் காலமானார். அவர் உடலை உதறிச் சென்ற பொழுது என்ன சொன்னார் என்று அன்பர்களைக் கேட்டேன். 'நான் அறம் செய்யாததினாலேதான் இப்படி இறக்கிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/138&oldid=1584353" இலிருந்து மீள்விக்கப்பட்டது