உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

114

மறைமலையம் -17

என்று வருந்திச் சொன்னாராம். இறக்குந் தறுவாயிலாவது அறம் செய்யவேண்டுமென்று எண்ணுகிறார்களே! நோய் காணும்பொழுது அறம் செய்யவில்லையே என்று வருந்து வோரும் உண்டு.

நாய் இருக்கக் கல் காணாதவர் - கல் இருக்க நாய் காணார். அதைப்போல் செல்வம் உள்ளபோது அறம் செய்ய விரும்பார். நோய் வந்தபோது அறம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறக்கிறது. ஆனால், நோயுள்ள தால் அச்சமயத்திலே அறம் செய்ய முடிவதில்லை. நோயுள்ளபோது உறவினர்களை அறம் செய்யும்படி ஏவினால் அவர்களோ அறம் செய்ய விரும்பாது, எப்பொழுது இறப்பார்? எப்பொழுது பொருள் கிடைக்கும்? என்ற எண்ணமுடையவர்களாக இருப்பார்கள்.

இயற்கை என்றால் கடவுள்; கடவுள் என்றால் இயற்கை; இரண்டும் உண்மையே! கடவுள் என்று கொண்டாலும் காள்ளுங்கள்; இயற்கை என்று கொண்டாலும் கொள்ளுங்கள்; ஓரளவுக்கு இவை ஒன்றே!

எல்லாம் இறைவனுடையது என்றிருக்க அதனை எனது எனது என்று சொல்லிக் கொண்டு பிறருக்கு வழங்காதது பெரும் பிழையல்லவா? தமிழ்ச் சான்றோரும் பிறரும் இதை அறிந்தால் உலகில் போரில்லை. இக்கருத்தை க்கருத்தை இப்பொழுது எல்லாரும் பரப்ப முயற்சி செய்கிறார்கள்.

தன்னலம் ஒழிந்து போகும் ஒழிய வேண்டும் என்று Tin Burn, Estral, Huxely, Darwin முதலிய மேனாட்டு அறிஞர்கள் நூல் வாயிலாக நன்கு பரப்பி யிருக்கிறார்கள். விரும்பிய உணவைக் கண்டபடி உண்ட உண்டால் சரியாக வெளிக்கு வருவதில்லை. எல்லாவற்றையும் தானே உண்டு விடுதல்

.

கூடாது.

அறிவுடையவர்கள் உணவைப் பகுத்து உண்ணவேண்டும்.

“பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னூலோர் பல்லுயிரோம்புத

தொகுத்தவற்று ளெல்லாந் தலை”

என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் சொல்லி யிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/139&oldid=1584355" இலிருந்து மீள்விக்கப்பட்டது