உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடு

  • அறிவுரைக்கொத்து

115

விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ச்சி செய்து ‘தென்னாடு தான் உயிர் வாழ்வதற்கு ஏற்ற இ டமாய் இருக்கிறது” என்று சொல்லுகிறார்கள். “தென்னாடு தான் முதலில் தோன்றியது, மற்ற நாடுகளெல்லாம் கடலால் சூழப்பட்டுக் கடல் நீர் நிறைந்து புற்பூண்டுகளுடன் காட்சி அளித்தன” என்று H.G. வெல்ஸ் சொல்லுகிறார். மேலும், மக்கள் முதலில்தோன்றிய இடம் தமிழ்நாடு, தென்னாடு என்கிறார். குமரி நாட்டில்தான் மக்கள் தோன்றினார்கள். குமரி நாட்டிலே இருந்த தமிழர்கள் பல நாடுகளுக்குக் குடியேறினார்கள். முதலில் அவர்கள் பேசியது தமிழ். அவர்கள் எழுதியவைகளெல்லாம் தமிழ்ச் சொற்களே. அவர்கள் வடக்கே, கிழக்கே, மேற்கே ஆகிய திசைகளி லெல்லாம் குடியேறினார்கள். வர வரப் பிற்காலத்திலே நாடு பிரிக்கப்பட்டுப் பல வேற்று மொழிகளிலே பழகினார்கள்.

ஆரியத்திலே மாதா

தமிழிலே தாய்

-

ஆரியத்திலே பிதா

-

தமிழிலே அப்பா

ஆங்கிலத்திலே

ஆடிவாநச - குயவாநச, மொழிக்கு

மொழி சொற்கள் எப்படி மாறுகின்றன பாருங்கள்.

.

·

ஆங்கிலேயர்கள் தோட்டத்திலே குழந்தைகள் விளை யாடிக் கொண்டிருந்தபோது, ஒரு குழந்தை கிறிஸ்து என்று சான்னது. மற்றொரு குழந்தை தமிழர்கள் சொல்லுவது போலக் கிறித்து என்று சொன்னது. ஊர்சளைவ என்று சொல்லுவது கடினந்தான். குழந்தைக்கு வலுவேறிய பிறகு 'அம்மா! போ!' என்று பேசுகிறது.

முதல் மொழி தமிழ்

முதலில்பிறந்த மொழி தமிழ். அதனால்தான் தமிழ் அழிந்து போகாமல் இருக்கிறது. தமிழ், மரபியல் கொண்ட மொழி. தமிழ், வழி வழியாக - இளமையோடு வழங்கி வருகிறது. மலையாளம் 700 ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழாக இருந்தது. கன்னடமும் துளுவுங்கூட முதலில் தமிழாகத்தான் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/140&oldid=1584357" இலிருந்து மீள்விக்கப்பட்டது