உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் 17

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழாக இருந்தது. தனித்துப் பழகிப் பழகி வேறு மொழியாய் விட்டது. ஆனால், தமிழ் மட்டும் இன்றும் தனித்து இயங்குகிறது. தமிழ் எந்தக் காலத்தும் அழியாது. தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுபவர்கள் தாமாகவே அழிந்து போவார்கள். இயற்கையிலே பிறந்து வளர்ந்தது தமிழ். ஆதலால், இயற்கையை யாரும் அழிக்க முடியாது. ஆகவே, தமிழையும் அழிக்க முடியாது. சுந்தரம் பிள்ளை அவர்கள்,

“பல்லுயிரும் பலவுலகும் படைத் தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன் னிருந்தபடி யிருப்பது போல் கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக்

கழிந்தொழிந்து சிதையாவுன்

சீரிளமைத் திறம்வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே”

தமிழே! நீ எப்போதும் இளமையோடு இருக்கிறாய் என்று வாழ்த்தியிருக்கிறார்.

தமிழின் ஆற்றல்

எகிப்தியர்கள் (Egypt) மொழி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. நாகரிகமான மொழி என்று அவர்கள் வழங்கிய மொழி மறைந்து போய்விட்டது. ஈப்ரு, லத்தீன் என்ற ரோமர்கள் மொழியும், அராபியர்களின் அராபிய மொழியும், ஆரியர்களின் சமஸ்கிருதமும் இப்பொழுது எந்த நிலையில் இருக்கின்றன? இன்னும் மெக்ஸிகோ (Mexico) மொழி, இருந்த இடம் தெரியவில்லை. இலக்கியங்கள் வளர்த்த இம்மொழிகளே இருந்த இடம் தெரியாமல் போயின. ஆனால், இன்னும் தமிழ் தனித்தியங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/141&oldid=1584358" இலிருந்து மீள்விக்கப்பட்டது