உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

117

தமிழினிடம் ஓர் இயற்கை சக்தி இருக்கிறது. தமிழுக்கு அருட்டுணையிருக்கிற வரையிலே தமிழை எவராலும் அழிக்க முடியாது. தமிழ்த்தாய் நம்மைக் காக்கிறாள். தமிழ்த்தாய் பிறருக்கு மயங்காள். நம்மைப் பாதுகாக்க முனைந்து நிற்பது தமிழ்!

தமிழானது

இயற்கைத் தொடர்புடை

.

தொடர்புடையது என்று

இதுகாறும் எடுத்துக் காட்டினேன். இராமலிங்க அடிகளார் தமது அருட்பாவில் 'பேசுதற்கும் இனியதாய்’

எனக்

கூறியுள்ளார்.

தமிழின் தரம்

தமிழைப்பற்றி ஒவ்வொருவரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள். எந்த மொழியும் பயிற்சி செய்யச் செய்ய ஓத ஓத இனியதாகவே இருக்கும். அறிவைக் கொண்டு எல்லாவற்றையும்விட இது சிறந்தது என்று சொல்லிவிடலாம். நன்கு ஆராயவேண்டியது நம்முடைய இன்றியமையாத கடமை!

எது சிறந்ததில்லையோ அதனை விடல் வேண்டும். எல்லாவற்றையும்விடச் சிறந்தது எதுவோ அதைக் காத்துக்

கொள்ளல் வேண்டும்.

தமிழ்மொழி எல்லா மொழிகளையும்விடச் சிறந்தது. தமிழன் தமிழ்மொழி தான் உயர்ந்தது என்று சொல்லுகிறான். ஆரியர்கள் தங்கள் மொழியான சமஸ்கிருதந்தான் உயர்ந்தது என்று சொல்லுகிறார்கள். தெலுங்கர்களோ “தெலுங்கு தேட்ட அரவம் அத்வானம்” என்று சொல்லுகிறார்கள். அவரவர்கள் தங்கள் தங்கள் மொழியே உயர்ந்தது என்று சொல்லி, மற்ற மொழிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். ஒரு செப்புத் துண்டை நன்றாகத் துலக்கிக் கொண்டுவந்து ஒருவரிடம் காட்டினால், அதனை அவர் பொன் என்றுதான் சொல்லுவார். பளீரென்று மின்னுவது கண்டு பொன் என்றே அதனை நம்புவர். அப்படி இரண்டையும் ஒன்றாக நினைக்கலாமா? வெள்ளியும் சிப்பியும் ஒன்றா? பொற்றுண்டு பொற்றுண்டுதான், செப்புத்துண்டு செப்புத்துண்டுதான். அன்பர்கள் சிலர் இரண்டையும் ஒன்றாகக் கருதுகிறார்கள். இவற்றுள் எது செப்பு, எது பொன் என்று கேட்டால், இவைகளுக்குள்ள வேறுபாடுகளைத் தெரியாமல் மயங்குவார் சிலர்.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/142&oldid=1584360" இலிருந்து மீள்விக்கப்பட்டது