உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

❖ LDMMLDMOшLD -17 →

ஓர் அன்பர் என்னிடம் “ஸர்வம் பிரமம், நானும் பிரமம், நீரும் பிரமம்” என்றார். உடனே நான், அவர் மடியிலேயிருந்த பொருளைச் சிறிது எடுத்துக் கொண்டு 'நீங்களும் பிரமம், நானும் பிரமம்” என்றேன். அவர் திடுக்கிட்டார். சிறிது நேரம் பிரமம்"என்றேன். அவர் வாளா இருந்துவிட்டு, “நீங்களும் பிரமம், அதுவும் பிரமம் ஆனால் உலக வழக்கில் அதனை எப்படிப் பிரமம் என்று சொல்வது?" என்றார். “எல்லாம் பிரமமாயிருக்கும்போது உங்களிடத்திலே உள்ள பிரமந்தானே என்னிடம் இருக்கிறது? சர்வம் பிரமம் என்று நீங்களே சான்னீர்கள். உலக வாழ்த்துக்குரிய பொருளைப் பிறரிடம் சென்றால் மட்டும் ஏன் பிரமம் என்று ஒத்துக் கொள்ளவில்லை? இதுதான் ஸர்வம் பிரமமா?” என்று கேட்டேன். கல்லையும், செப்பையும், இரும்பையும் சோற்றையும் ஒன்று படுத்தலாமா? சோற்றை உண்ணலாம், சோற்றால் வீடு கட்ட முடியுமா? எந்தப் பொருளையும் வேற்றுமை யறிந்து, இடமறிந்து பயன்படுத்தல் வேண்டும். ஸர்வம் பிரமம் என்றால் ஒவ்வாது.

பழக்க வழக்கங்களினாலே வேப்பிலையைக் கரும்புபோல உண்பாருண்டு. பர்மாவிலே கசப்பான பொருள்களைக், கரும்பை நாம் சுவைப்பதுபோலச் சுவைத்து உண்கிறார்கள். நமக்குக் கசப்பாயிருப்பது அவர்களுக்கு இனிப்பாயிருக்கிறது. நமக்கினிக்கும் கரும்பை அவர்களிடம் கொடுத்தால் அஃது அவர்களுக்குக் கசக்கத்தான் செய்யும். இவற்றிற்கெல்லாம் காரணம் பழக்கந்தான். கோழியைப் பாறைமேல் விட்டாலும் குப்பையைக் கிளறுவது போலவே கிளறும். பழக்க வழக்கத்தால் சிலருக்குச் சர்க்கரை கசக்கும். சிலருக்கு இனிக்கும்.

ஒட்டகம் வேப்பிலையைத்தானே தின்கிறது. ஆனால் வேப்பிலையை மற்ற விலங்குகளோ தொடுவதில்லை! பழக்க மிருக்கிறதே அது நல்லதைத் தீயதாக்கும், தீயதை நல்ல தாக்கும்.

தமிழின் இனிமை

பிற மொழிகளில் உள்ள சில எழுத்தொலிகள் தமிழில் இல்லாததைச் சிலர் தமிழுக்குக் குறையாகச் சொல்கிறார்கள், இஸ் என்று சொன்னால் நமக்கு இளைப்பு வரும். ஹா என்றால் களைப்பு வரும். இந்த இஸ்-உம் ஹா-வும் நமக்கு இளைப்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/143&oldid=1584361" இலிருந்து மீள்விக்கப்பட்டது