உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

119

களைப்பும் தருவதால் அவை நமக்கு வேண்டாம்; நமக்கு இளைப்பும் களைப்பும் ஏன்?

'ச' போதும் 'ஜூ' வேண்டாம். தமிழ் மொழிகளிலே உள்ள சொற்களின் சிறப்பை அறிந்தால், மற்ற மொழிகளெல்லாம் எம்மாத்திரம்?

இளமையில் நான் வேதங்களை உருப்போட்டதுண்டு. உருப்போட்ட பின் வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக வரும். இப்படி இரத்தம் வருவதற்கு மூலக்காரணம் என்ன என்று மருத்துவர் பலரைக் கேட்டேன். மருத்துவர்கள் ஏதேதோ காரணங்களைச் சொன்னார்கள். ஒவ்வொரு மருத்துவரும் அதைச் செய் இதைச் செய் என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஸம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் “காலையிலே" உருப் போடுவது எனக்குத் துன்பமாகத்தான் இருந்தது. காலையிலே எழுந்து உருப்போட்டவுடன் உடம்பிலே வலுவில்லாமல் போயிற்று. அரை மணி நேரம் வரை தமிழ்ப் பாடல்களை ஓதிவந்தேன். அப்பொழுது எனக்குத் துன்பமேயில்லை. இன்பமே இருந்தது.

ஒரு மருத்துவர் என்னைக் காலையில் காலையில் ஓதுகின்ற உபநிஷிதத்தையும், வேதங்களையும் பதினைந்து நாட்கள்வரை நிறுத்திவைக்கச் சொன்னார். உபநிஷிதத்தையும், வேதத்தையும் நிறுத்திவைத்துத் தமிழையே ஓதினேன். அப்பொழுது இரத்தம் வரவில்லை! அதிலிருந்து சமஸ்கிருதம் 'இரத்த மொழி' என்று முடிவு செய்தேன். தமிழுக்கும் ஸமஸ்கிருதத்திற்கும் இந்த வேறுபாடிருக்கக் காரணம் என்ன? என்று ஆராய்ச்சி

செய்தேன்.

தமிழ்மொழி அருந்தவத்தோர் மொழி. நம் உடம்பிலே உள்ள ஆற்றல் அழிந்து போகாதபடி தமிழ்ச் சொற்கள் அமைந்திருக்கின்றன. மிக இளைஞர்களாக உள்ளவர்கள் பார்வைக்கு முதியவர்களாகத் தோன்றக் காரணம் என்ன? 60, 70, 80 - வரை உயிரோடிருப்பவர்களைக் காண்ப தரிதாயிருக்கிறது. 30-க் குள் மாண்டுபோவார் தொகை மிகுதி. திருமூலர் பெரிய முனிவர். அவர் சிறந்த உண்மைகளை நன்கு கண்டவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/144&oldid=1584362" இலிருந்து மீள்விக்கப்பட்டது