உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

121

வல்லமையால் காட்டி வெற்றி கண்டுவிடுவார் என்று பலர் எண்ணினார்கள்.

கடை

பல மொழிகளின் ஓசையைத் தம்முடைய வல்லமையால் ஸம்ஸ்கிருதத்திலே இருந்து வந்ததென்று சான்றுகள் காட்டினார். இதை எவராலும் மறுக்க முடியவில்லை! சியாக அவர் இங்கு வந்து சேர்ந்தார். பூண்டி அரங்கநாத முதலியாரை அக்காலத்தில் ழுநைேரள என்று சொல்லுவார்கள். சேலம் இராமசாமி என்பவர் ஒரு பெரிய வழக்கறிஞராக இருந்தார். தண்டலம் பாலசுந்தர முதலியார் தமிழிலே வல்லவர். இவர்கள் மூவரும் வந்தார்கள். ஆரியப் புலவரும் வந்து சேர்ந்தார். கன்னடப் புலவர் ஒருவர் ஒரு பாடலைப் பாடிக் காட்டினார். அப்படியே கன்னடப் பாடலின் ஓசையை வைத்துக் காண்டு, ஆரியப் புலவர் ஸம்ஸ்கிருதத்திலிருந்து சான்றுகள் காட்டி சமஸ்கிருத ஓசையிலேயே அப்பாடலைப் பாடிக் காட்டினார். எல்லாரும் வியந்தார்கள். தண்டலம் பாலசுந்தரர், பூண்டி அரங்கநாத முதலியாரைப் பார்த்து “இந்த ஆரியப் புலவரைத் தமிழ் மடக்குமா?” என்று கேட்டார். அதற்குப் பூண்டி அரங்கநாத முதலியார் “ஒரு பாட்டுப் பாடுகிறேன் பாருங்கள்” என்றார்: “விழியாற் பிணையாம், விளங்கி யலான் மயிலா, மிழற்று மொழியார் சிறியா, முதுவானவர்த முடித் தொகைகள்

கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்

-

கெழிலாமெங் குலதெய்வமே”

திருச்சிற்றம்பலக் கோவையிலிருந்து ழகர - ளகர ஓசை - ழகரம் ளகரம் உடைய இந்தப் பாட்டை ஒருதரம் பாடினார். உடனே ஆரியப் புலவர் முகத்தைச் சுளித்தார். ஆரியப் புலவர் முடிவிலே "இந்த ஓசையை என் பிறவியிலேயே நான் கேட்டறியேன்; இது என்ன மொழி?" என்று கேட்டாராம். “இதுதான் அமிழ்தினும் இனிய தமிழ் மொழி" என்று அவருக்கு விடை சொன்னார்களாம்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/146&oldid=1584365" இலிருந்து மீள்விக்கப்பட்டது