உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

14. அறிவுநூற் கல்வி

கல்வியானது இருதிறப்படும். அவை உலக நூற்கல்வி, அறிவுநூற் கல்வி என்பனவாம்.

இவற்றுள் உலகநூற் கல்வி உடம்பைப் பற்றிக் கொண்டும் அறிவு நூற்கல்வி உயிரைப் பற்றிக் கொண்டும் நடை பெறுவனவாகும். உயிரின் அறிவு விளக்கத்திற்கு உடம்பு இன்றியமையாத் துணையாய் இருத்தல்போல, அறிவுநூற் கல்வியைத் தருதற்கும் உலகநூற் கல்வி இன்றியமையாக் கருவியாய் இருக்கின்றது. அறிவு விளக்கம் இல்லாத உயிருக்கு உடம்பிலிருந்தும் பயன்படாததுபோல அறிவுநூற் கல்வி பெறாதவர்களுக்கு உலகநூற் கல்வி இருந்தும் பயன்படுவது இன்றாம்.

நறுமணங் கமழத் தேன் ஒழுகி இனிய பழங்கள் குலை குலையாய்த் தொங்கும் ஒரு தேமாந்தோப்பிற்குச் செல்ல விரும்பினான் ஒருவன். அங்கே போவதற்கு இசைந்த வழியைத் தெரிந்து அதனூடே சென்று அவ்விடத்தைச் சேர்வானானால், தான் நீண்டவழி நடந்து வந்ததனால் உண்டான பயனைப் பெற்றுப் பசியுங் களைப்புந் தீர்ந்து மகிழ்ந்திருப்பான். அவ்வாறன்றி அவ்வழியில் உள்ள சில புல்லிய காட்சிகளையே கண்டுகொண்டு உடம்பிலுள்ள வலிமை குறையும் நேரம் வரையில் வழியிலேயே காலங் கழித்து விடுவானாயின் மிகுந்த பசியுங் களைப்பும் வந்து மூடிக்கொள்ள மேற்செல்ல மாட்டாதவனாய் அவ்வழியினிடையே சோர்ந்து விழுந்து உயிர் துறப்பான்.

அதுபோலவே,

அறிவுநூற் கல்வியைப் பெறுதற் பொருட்டாகவே வந்த இம்மக்கள் யாக்கையிலிருந்தும், முடிவாக அதனை அடைதற்கு முயலாமல் உலக நூற் கல்வியளவில் ஒருவன் நின்று விடுவானானால், அவனெடுத்த இம்மக்கட் பிறவி வெறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/148&oldid=1584367" இலிருந்து மீள்விக்கப்பட்டது